ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்சிஜனை - தமிழகத்தின் தேவையை நிறைவேற்றிய பிறகே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்

 திமுக தலைவர் மு..ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.28 தமிழகத்தின் முழு தேவையை நிறைவேற்றிய பிறகே ஸ்டெர்லைட்டில் தயாராகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (27.4.2021) வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் தேவைக்கு முழுமையாக பயன்படுத்தப்பட்ட பிறகேஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனைஅனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

திருச்சி பெல் நிறுவனத்தில் முடங்கியுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மய்யத்தை விரைந்து மறு உருவாக்கம் செய்ய வேண்டும் எனமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு திமுக எம்.பி. திருச்சி சிவாகடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மாநிலங்களின் தேவைக்கேற்ப மத்திய அரசுஆக்சிஜனை பிரித்து வழங்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அனைத்துக் கட்சிகள் முன்வைத்த நிபந்தனையின் அடிப்படையிலான அரசின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க தமிழக அரசு தவறிவிட்டதன் விளைவு இது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவையும்அதிகரிக்கும். எனவே, தமிழகத்தின் முழுத் தேவையை நிறைவேற்றிய பிறகு, மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அளிப்பதே சரியான வழிமுறையாகும்.

ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழுத் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பை பிரதமர் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் உடனடியாக தமிழகஅதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும். பேரிடர் நேரத்தில் தமிழகத்துக்கு எந்த வகையிலும் அநீதி இழைக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments