பா.ஜ.க. முதல்வரை நுழைய விட மாட்டோம்: விவசாய சங்க தலைவர் திட்டவட்டம்

 புதுடில்லி,ஏப்.12- ‘அம்பேத்கர் சிலை திறப்பு விழாவுக்கு வரும் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை பதோலி கிராமத் திற்குள் நுழைய விட மாட்டோம்,’ என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் கூறியுள்ளார்.

மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டில்லி எல்லையில் கடந்த 4 மாதத்திற்கும் மேல் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் ஒருங் கிணைத்து வருகிறார்.

இந்நிலையில், அரியானாவின் பதோலி கிராமத்தில் வரும் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவைத் தொடர்ந்து, அவரது சிலையை அம்மாநில பாஜக முதல்வரான மனோகர் லால் கட்டார் திறந்து வைக்க உள்ளார்.

இதுகுறித்து திகைத் கூறுகையில், ‘பதோலி கிராமத்திற்குள் நுழைய முதல்வர் கட்டாரை சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்க விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல, முதல்வர் கட்டாருக்கு எதிரானவர்கள். முதல்வர் கட்டார் வருவதே விவசாயிகள் மத்தியில் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கத்தான். அவருக்கு பதிலாக யார் வேண்டு மானாலும் சிலையை திறந்து கொள்ளலாம். அவரை அனுமதிக்க மாட்டோம்,’ என்று கூறியுள்ளார்.

Comments