'சுவரும் தகரமும்' - குஜராத்தில் தொடரும் அவலம்

காந்திநகர், ஏப். 20  குஜராத் மாநிலத்தில் கரோனா தொற்று பேரிடராய் அமைந்துவிட்ட நிலையில் மரணங்கள் கட்டுக் கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் பொது வெளியில் வைக்கும் உடல்களை மக்களின் பார்வையில் இருந்து மறைக்க தகர தடுப்புகளை அவசர அவசரமாக மாநில அரசு அமைத்து வருகிறது,

உலகின் மிகப் பெரிய சிலையும், மிகப்பெரிய விளை யாட்டு மைதானமும் கட்டிய மோடி குஜராத்தின் அடிப்படை தேவையான மருத்துவமனைக் கட்டமைப்பை உருவாக்கத் தவறி விட்டது தற்போது வெளிச்சத் திற்கு வந்துள்ளது,

குஜராத்தில் நாளொன்றுக்கு இருபதாயிரத்தைத் தாண்டும் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் நோயாளிகளை மரணத்தில் தள்ளிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது குஜராத் அரசு. அங்குள்ள மருத்துவமனைகளில் இடவசதி இல்லாததால் ஆம் புலன்சிலேயே உயிர் விட்ட கொடுமைகளோடு மருத்துவ மனைவாசலில் உயிரிழக்கும் அவலங்களும் நடந்துவருகிறது.

 இந்த நிலையில் கோவிட் மரணம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி குஜராத்தின் நிலை குறித்து பெரிதும் விமர்சனத்திற்கு ஆளாகி வரும் போது அதை மறைக்க பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள உடல்களை மறைக்க தகரங்களைக் கொண்டு தடுப்புகள் அமைத்து வருகிறது அம்மாநில அரசு. சூரத், ஜாம்நகர், ராஜ்கோட், வடோதரா, அகம தாபாத் மற்றும் காந்திநகர் பகுதிகளில் பொது இடங்களில் திடீரென்று தகரம் அடிக்கப்பட்டு வருகிறது. உள்ளே சென்று பார்த்தால் வரிசையாக உடல்கள் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது, கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு இறந்தவர் களின் உடல்களைப் பெற உற வினர்கள் தயாராக இல்லாததால் உடல்களை என்ன செய்வதென்று தெரியாமல் அரசு திணறி வருகிறது.

கடந்த ஆண்டு டிரம்பின் குஜராத் வருகையின் போது குடிசைப்பகுதிகளை சுவர் கட்டி மறைந்த மத்திய, மாநில அரசுகள் தற்போது உடல்களை மறைக்க தகரம் கொண்டு தடுப்பறைகள் கட்டி வருகின்றன.

Comments