ரஷ்யாவில் தந்தை பெரியார்

பஞ்சாயத்து மூலம் வீடுகள் விநியோகிக்கப்படுகிறது

* ஒருவருக்கு வீடு இத்தனை அளவு நீளம், அகலம் மற்றும் இடவசதி என்று நிர்ணயிக்கப்படும். அந்த வீட்டில் எத்தனைப் பேர் உறுப்பினர்களோ அதற்கேற்றாற்போல் அளவிட்டு வீடுகள் அளிக்கப்படுகின்றன.

* வீட்டிலேயே இருந்து தொழில் செய்பவர்களாக இருந்தால் அதற்கேற்றபடி அவ்வீடுகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

* குடியிருப்போராக இருந்தால் வாடகை எப்படி எந்த வழிமுறையில் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது.

* தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு தனிப்பாகத்தை அத்தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளியின் வீட்டு வசதிக்கு என்றே ஒதுக்கி வைக்கப்படுகிறது.

சுகாதார முறைகள்

* அவசர சிகிச்சைப் பிரிவு வீட்டுக்கு வந்தே சிகிச்சை அளிக்க ஏற்பாடு.

* சுகாதார குறைவான வேலைகளில் ஈடுபடுவோருக்கு அதற்கேற்ற ஏற்பாடுகள்.

* குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் பட்டியலிடப்பட்டு, குறிப்பிட்ட காலங்களில் அந்த வீடுகளுக்குச் சென்று மருத்துவ உதவிகள் செய்தல், அவசியம் ஏற்பட்டால் வீட்டின் நிலையையும் வேலையின் முறையையும் சீர்படுத்துதல்.

* கருவுற்ற தாய்மாருக்கான தனி ஏற்பாடுகள் ஆலோசனை மய்யங்கள்

* பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான சிறப்பு வைத்திய முறைகள்

* தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முழு மருத்துவப் பரிசோதனை.

ரஷ்ய பெண்களின் நிலை

* அடுப்பூதும் பெண்கள் அந்த வேலையை விட்டு தொழிற்சாலைக்குச் செல்லும்படி தூண்டுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சுரங்கங்களிலும்கூட அவர்கள் பணியாற்றுகிறார்கள். ஒரு கால்வாய் வெட்டும் வேலையில் பெண்கள் ஈடுபட்டது ஆனந்தத்தை அளிக்கிறது என்கிறார் தந்தை பெரியார்.

* சட்டத்தின் முன் ஆண் - பெண் சமம். 18 வயது அடைந்த பெண் தன் விருப்பத்துக்கு ஏற்ப நாயகனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்; விருப்பம் போல் விவாகரத்தும் செய்து கொள்ளலாம். ரஷ்ய பெண்கள் விடுதலைக்கு லெனின் மூலகாரணம் என்று பெண்கள் கூறுகிறார்கள்.

* மக்களில் ஒரு பகுதியினர் சமையல் அறையில் அடிமைப்பட்டு வாழ்ந்தால் சுதந்திரத்தை எட்ட முடியாதென்று தோழர் லெனின் கூறுவதுண்டு. ஆகையினால், பெண்ணொருத்தி சாப்பாடு சமைத்து, துணிகளை துவைத்து, குழந்தைகளைப் பராமரித்து கஷ்டப்படுவதைக் காட்டிலும் மக்களுக்கு உணவளிக்கவும், உடுக்கவும், குழந்தைகளைப் பாலூட்டி வளர்க்கவும் சமுதாயம் பொறுப்பேற்றுக் கொண்டால், நிர்வாகம் ஒழுங்கு பெறுமென்று எண்ண ப்படுகிறது. (‘குடிஅரசு’ - 30.7.1933)

* திருமணத்திற்குத் தனி பதிவாளர் அலுவலகம். 10 நிமிடங்களுக்குள் திருமணம் நடந்துவிடுகிறது. மோதிரங்கள் மாற்றும் சடங்கு கூட இல்லை. குறிப்பிட்ட தொகையை பதிவாளரிடம் கொடுத்து விட வேண்டியது தான். அதோடு எளிதாக முடிந்துவிடுகிறது.

* சட்டப்படி பிறந்த குழந்தை இல்லை என்றெல்லாம் கூறி உதறித் தள்ளப்படுவதில்லை.

* விவாகரத்தும் எளிதில் முடிந்துவிடுகிறது. கணவன் துன்புறுத்த முடியாது. கணவனுடன் ஒன்று கூடி வாழ முடியாது என்றால் விவாகரத்து செய்து அவனை விட்டு விலகிவிடலாம். பிள்ளைகள் இருந்தால், அவர்களை அரசு காப்பாற்றும்.

தந்தை பெரியார் கூறும் ஒரு தகவல் சுவையானது

* ரஷ்ய பெண்கள் தங்களை சிங்காரித்துக் கொள்வதில்லை. உதடுகளுக்கும், புருவங்களுக்கும் மை பூசுவதைப் பார்ப்பதற்காக தெருக்களில் நான் வெகு நேரம் நின்றேன். மை பூசிய முகங்களை நான் காணவில்லை. எளிய ஆடைகளையே பெண்கள் உடுத்துகின்றனர். தங்களுக்குத் தேவையான ஆடைகளை பெண்களே தயாரித்துக் கொள்கின்றனர்.

* மனிதனுக்கு வயது 150 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறந்த பின்னும் உயிர்ப்பிக்க வைக்கும் முயற்சி

* ஓர் ஆராய்ச்சி நிலையத்தில் உயிரற்றுப் போன ஒரு உடலில் இருந்து இதயம் கொண்டு வரப்பட்டு செயற்கை ரத்தம் கொண்டு ஒரு கண்ணாடித் தொட்டியில் வைக்கப்பட்டது. பூதக் கண்ணாடியைக் கொண்டு பார்த்தபோது அந்த இதயம் உயிர் பெற்று ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கியது. அந்த இதயத்தை ஒவ்வொரு நாளும் புதிய செயற்கை ரத்தத்தில் வைத்துக் கொண்டு வந்ததன் பயனாக அது 61 நாள்கள் வரை வேலை செய்ததாம்.

* காந்த சக்தியால் காய்கறி உற்பத்தி

* கண் பார்வையற்றவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பார்வை பெறச் செய்தல்.

* ரஷ்யாவில் ஒவ்வொரு தொழிற்சாலையும் பொதுச் சமையல், பொதுப் பள்ளிக்கூடம், பொதுத் தோட்டம், பொது நாடக மேடை அமைக்கப்படுகிறது. மாஸ்கோவில் சிறுவர்களுக்கென்று ஒரு நாடக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நீதி முறை - வழக்குரைஞர்கள்

வழக்குரைஞர்கள் தங்களைப் பதிவு செய்த பின்னர், வழக்குரைஞர் சங்கத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும். இந்த சங்கத்தின் சார்பில் விசாரணை அலுவலகம் ஒன்றுண்டு. எவருக்காவது வழக்குரைஞர் தேவைப்பட்டால் ஒரு வழக்குரைஞரை இந்த விசாரணை அலுவலகம் அனுப்பிவைக்கும். வழக்கிற்கான பணத்தை வழக்குரைஞரிடம் கொடுக்கக் கூடாது - சங்கத்திடம் அளிக்க வேண்டும். அந்த சங்கம்தான் வழக்குரைஞருக்கு திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் கொடுப்பார்கள். வழக்குரைஞர்கள், நீதிபதிகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க மாகாண நீதிமன்றம் மற்றும் ஒழுக்க இலாகாவுக்கு அதிகாரம் உண்டு.

Comments