பாம்பின் வாயில் சிக்கிய தவளையாக அ.தி.மு.க.: இரா.முத்தரசன்

புதுக்கோட்டை,ஏப்.4- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.சின்ன துரை, திமுக வேட்பாளர்கள் ஆலங் குடி சிவ.வீ.மெய்யநாதன், புதுக் கோட்டை வி.முத்துராஜா ஆகி யோரை ஆதரித்து அந்தந்த தொகுதி யில் 1.4.2021 அன்று இரா.முத்தரசன் பேசியதாவது:

திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது.

கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவே உள்ளன. தமிழக மக்களால் வெறுக் கப்படும் மோடி பிரச்சாரத்துக்கு வந்தால் அது திமுக அணிக்கு ஆதர வாகவே மாறும்.

தனித்துவமாக செயல்படவேண் டிய அமலாக்கத்துறை, சிபிஅய், தேர்தல் ஆணையம் ஆகியவை மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டன.

மற்றவர்களை அடக்கி, ஒடுக்கி, ஒரே நாடு, ஒரே கட்சி என கொண்டு வரத் துடிக்கும் பாஜவுக்கு முதல்வர் பழனிசாமி துணை போகிறார்.

பாம்பின் வாயில் சிக்கியுள்ள தவளை போல அதிமுக உள்ளது. பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக தவளையை விழுங்கத் தொடங்கி இருப்பதால் தவளையின் சத்தம் குறைந்துள்ளது.

கஜா புயல் நிவாரணம், கரோனா நிவாரணம் போன்ற தமிழக அரசுக்கு வரவேண்டிய நிவாரணத் தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லை. விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன என்றார்.

திருச்சியில் பிரச்சாரம்

பின்னர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை ஆதரித்து இரா.முத்தரசன்  காட்டூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

தமிழகத்தில் தற்போது நடை பெறுவது தேர்தல் திருவிழா அல்ல. அரசியல் போர்.

இதில் மக்கள் நலன், மாநில நலன் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்காக திமுக கூட்டணி கட்சிகள் போராடி வருகின்றன.

இப்போராட்டம் வெற்றி பெற திரு வெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு அனை வரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

 இதேபோல திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர்கே.என்.நேருவை ஆதரித்து உறையூரிலும், கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதய ராஜை ஆதரித்து மலைக் கோட்டை பகுதியிலும் முத்தரசன்  பிரச்சாரம் செய்தார்.

Comments