முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் இறுதி மரியாதை

சென்னை, ஏப். 7 - மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் வே.ஆனைமுத்து அவர்கள் உடல் தாம்பரம் இரும்புலியூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக் கப்பட்டிருந்தது. இன்று (7.4.2021) காலை அவரது இல்லத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அங்கே வைக்கப்பட்டிருந்த நினை வேட்டில், தனது  கருத்துகளைப் பதிவு செய்தார். அவரது பதிவு வருமாறு:

அருமைத் தோழர் மானமிகு வே.ஆனை முத்து அவர்களை மாணவப் பருவம் தொட்டு அறிவேன். கொள்கையால் இணைந்த அவரது வாழ்வும், தொண்டும் மறக்க முடியாதவை. முதுபெரும் பெரியார் பெருந்தொண்டராகப் பழுத்தவர். சமூக நீதிப் போராளி!

இப்படிப்பட்ட கொள்கையாளர்கள் உடலால் மறைந்தாலும், என்றும் லட்சியமாய் வரலாற்றில் வாழ்பவர்கள்.

கடவுள் மறுப்பாளர்களது வாழ்வு எவ்வளவு நீண்ட கால வாழ்வாகவும் அமையும் என் பதையும், 96 ஆண்டு கால வாழ்வின் மூலம் அவர் உலகுக்கு நிரூபித்து உள்ளார்!

இழப்பிலிருந்து மீள சமூகநீதிப் போர்க் களத்தைத் தொடருவோம்.”

உடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சென்றிருந்தனர்.

இறுதி மரியாதை செலுத்தியோர்

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்  .முத்தையன்,  தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், கரிகாலன், (கல்லணைக் கொண் டான்), தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வ நாதன், அண்ணாநகர் பழ.சேரலாதன்,  சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், குரோம்பேட்டை கமலக் கண்ணன், இராசேந்திரன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் கரைமா நகர் தே.சுரேஷ், வழக்குரைஞர்  உத்திரகுமாரன், சீர்காழி இராமண்ணா, கடப்பேரி மனோகரன், திருக்குறள் வெங்கட்ராமன், ராஜகீழ்பாக்கம்,செல்வராசன், கூடுவாஞ்சேரி மணி வண்ணன், ஊரப்பாக்கம் பொய்யாமொழி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ. சுரேஷ், தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் மணிதுரை, தென் சென்னை மாவட்ட இளைஞ ரணித் தலைவர் மகேந்திரன், வெ.ஞானசேகரன், கூடுவாஞ்சேரி மா.இராசு,பூவிருந்தவல்லி ஆறு முகம், அரும்பாக்கம் தாமோதரன், பூவிருந்தவல்லி தமிழ்செல்வன், பழவந்தாங்கல் .தமிழினியன், குன்றத்தூர் திருமலை, இராமாபுரம் ஜனார்த்தனன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், மா.குணசேகரன்,அப்துல் சத்தார்,.ரஷீத், செம்பாக்கம் விஜய் உத்தமன், மடிப்பாக்கம் பாண்டு, நீலாங்கரை நித்தியானந்தம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை செயல்பாட்டாளர்கள் இளமாறன், தாம்பரம் மோகன், ஆடானைக் குமரன், செந்தாமரைக் கண்ணன், சாந்தசீலன், அம்பத்தூர் இராஜீ, இராமகிருஷ்ணன், மோகன்ராம், முத்துகுமார், பெல்.ராஜன், எழில்இளங்கேவன், உமா, மணிகண் டன், முத்தையா குமரன், கு.தனசேகரன், மத்திய எரிபொருள் இயற்கை எரிவாயு துறையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தை சேர்ந்த சதீஷ் கண்ணன், சேகர், அன்பரசு, சங்கர்,பாண்டிதுரை, சாம்ராஜ் மற்றும் தாம்பரம் சு.மோகன்ராஜ், தகடூர் சம்பத்  ஆகியோர் இறுதி மரியாதை செய்தனர்.

ஆனைமுத்து அவர்களின் உடல் போரூர் இராமச்சந்திரன் மருத்துவமனைக்கு இன்று மாலை ஒப்படைக்கப்படும்.

Comments