"பிஎம் கேர் நிதி" என்ன ஆனது? தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு - ராகுல்

புதுடில்லி,ஏப்.18 தடுப்பூசி பெயரில் பாசாங்கு காட்டுகிறது மோடி அரசு என்று கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திகரோனா காலத்தில் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட  "பிஎம் கேர் நிதி" என்ன ஆனதுஎன கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனாவின் 2-ஆவது அலையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்படி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம் போடப்பபட்டு 45வயதுக்குமேற்பட்டோருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது.  ஆனால், பல மாநிலங்களில் போதிய அளவுக்கு தடுப்பூசிகள் இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன்  திரும்பி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ராகுல்காந்தி தனது சுட்டுரைப் பதிவில்,  தடுப்பூசி 'திருவிழா' என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள், வெண்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜன், தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. மக்களிடம் பெறப்பட்ட பி.எம்.கேர். நிதி என்ன ஆனது? என  காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசுகளுடனான ஒப்பந்தங்களுக்கு மட்டுமே

தடுப்பு மருந்து: ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு!

புதுடில்லி,ஏப்.18 இந்தியாவுக்கான தனது தடுப்பு மருந்து விநியோகத்தை, அரசு ஒப்பந்தங்களின் மூலமாக மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும், தனியார் நிறுவனங்கள் மூலம் சாத்தியமில்லை என்றும் அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது;

உலக நாடுகளின் அரசுகளுடைய தடுப்பு மருந்து திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவே ஃபைசர் நிறுவனம் விரும்புகிறது.

எனவே, எங்கள் தடுப்பு மருந்தை, அரசுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படியே மருந்தை விநியோகம் செய்ய முடியும். எனவே, இந்தியா தொடர்பாகவும் இதே நடைமுறையைத்தான் நாங்கள் பின்பற்றுகிறேம்.

இங்கு, அரசின் தடுப்பு மருந்து திட்டங்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், தடுப்பு மருந்தை பெறுவதற்கு அனுமதியளிக்க வேண்டுமென எழும் கோரிக்கைகளையடுத்து, ஃபைசர் நிறுவனத்தால் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments