செய்தியும், சிந்தனையும்....!

ஆட்சியா  - அராஜகமா?

*          "என் அன்றாட உரையாடல்கள் என் தொலைப்பேசிக்கு வரும் அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன!  

- மம்தா , மே.வங்க முதல் அமைச்சர்

>>           மத்திய அரசின் பண்பாடான நிலைக்கு ஒரு முதல் அமைச்சர் தரும் சர்டிபிகேட்  

சொல்லுவது யார்?

*           கரோனா - மதத் திருவிழாக்களை,  கட்டுப்படுத்த வேண்டும்.  

- ரத்தீப்குலேரியா, எய்ம்ஸ் இயக்குநர்

>>           நாம் சொன்னால் அதற்கு ஒரு வண்ணம் பூசு வார்கள். சொல்லியிருப்பவர் எய்ம்ஸ் இயக்குநர் - நினைவிருக்கட்டும்?

பட்டால்தான் புத்தி!

*           இந்தியாவில் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்குக் கரோனா!   

>>           இப்பொழுதாவது கும்பமேளாவுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டதே!

அங்கு மட்டும் என்ன வாழ்கிறது?

*           கரோனா - சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வட இந்தியக் குடும்பங்கள் 

>>           இக்கரைக்கு அக்கரை பச்சை!

சட்டத்துக்கு முன் அனைத்தும் சமமே!

*           கும்பமேளாவுக்குச் சென்று வந்தால் 15 நாள் தனிமையாக இருக்க வேண்டும்

-  டில்லி  தலைமைச் செயலாளர் ஆணை

>>           'புனிதமான' ஆணை.

தலைவிதி என்று தப்பிக்க முடியாது!

*           ஆக்சிஜன் பற்றாக் குறையால் மத்தியப் பிரதேசத்தில் 6 கரோனா நோயாளிகள் பரிதாப மரணம்.   

>>           உயிருக்கு என்ன விலை?

தயக்கமா? மயக்கமா?

*          புதிய கட்டுப்பாடுகள் காரணமாக "டாஸ்மாக்"   கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடல் - மற்ற நாட்களில் இரவு 9 மணி வரை நடக்கும்.

>>           பல திசைகளிலிருந்தும், கொடுத்த அழுத்தத் திற்குப் பிறகு இந்த அறிவிப்பு -  பொருளாதார வருமானம் தரும் 'போதை' சரக்காயிற்றே!

என்ன 'சமாதானம்' இதற்கு?

*          நெல்லை அருகே சீவலப்பேரியில் உள்ள கோயிலில் ஆடு, கோழி, பலியிடுதல் தொடர்பான சமாதான பேச்சு வார்த்தையின்போது கோயில் பூசாரி சிதம்பரம் வெட்டப்பட்டுக் கொலை.   

>>           கேட்டால் அம்பாள் கடாட்சம் என்பார்களோ!

பறிப்பு எனும் அரிப்பு நோய்?

*          ஈழத் தமிழர்களின் தாயக நிலப்பறிப்பில் சிங்கள அரசு தீவிரம்                     - வைகோ கண்டனம் 

>>           அவர்கள் திருந்தப் போவதில்லை.

Comments