ஜேபி நம்மை விட்டு பிரிந்தாரே!

 வாய்ஸ் ஆப் ஓபிசியின் ஆசிரியரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயல் தலைவரும், பாங்க் ஆப் பரோடா ஓபிசி அமைப்பின் கவுரவத் தலைவருமான திரு. ஜே.பார்த்தசாரதி இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடனும், அதிர்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று தேறிவருவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி நம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அகில இந்திய கூட்டமைப்பின் செயல்பாட்டில் உற்ற துணையாக, வழிக்காட்டியாக இருந்த தோழரை நாம் இழந்துவிட்டோம். எப்படி ஆறுதல் கொள்வது?

பிற்படுத்தப்பட்டோரின் குரல் தனது பேச்சை நிறுத்திக் கொண்டது. அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தார், வாய்ஸ் ஆப் ஓபிசி வாசகர்கள், கூட்டமைப்பின் தோழர்கள் அனைவருக்கும் நமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோ.கருணாநிதி,  பொதுச் செயலாளர்

..பிற்படுத்தப்பட்ட பணியாளர்

நல சங்கங்களின் கூட்டமைப்பு 15.4.2021

Comments