கோகர்ணா கோயில் நிர்வாகத்தை மடாதிபதியிடமிருந்து மேற்பார்வை குழுவிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு,ஏப்.21- கருநாடகாவில் உள்ள கோகர்ணா மகாபலேஷ்வர் கோயில் நிர்வாகத்தை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையிலான மேற்பார்வைக் குழு விடம் ஒப்படைக்குமாறு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு கருநாடக அரசு அம்மாநிலத்தில் உள்ள கோகர்ணா மகாபலேஷ்வர் கோயிலின் நிர்வாகத்தை ராமசந்திரபுரா மடாதி பதியிடம் ஒப்படைத்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக் கில் அரசின் உத்தரவை ரத்து செய்தஉயர் நீதிமன்றம், நிர்வாகத்தை மேற் பார்வையாளர் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராம சந்திரபுரா மடத்தின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட் டது. இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..பாப்டே, நீதி பதிகள் .எஸ்.போபண்ணா, வி.ராம சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று  (20.4.2021) காணொலி விசாரணை மூலம் தீர்ப்பு வழங்கியது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.. பாப்டே, "கோகர்ண மகாபலேஷ்வர் கோயில் நிர்வாகம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிபி.என்.கிருஷ்ணா தலைமையிலான மேற்பார்வைக் குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது.

எனவே கோகர்ணா கோயில் நிர்வாகத்தை மேற்பார்வைக் குழுவிடம் ராமசந்திரபுரா மடாதிபதி ஒப்படைக்க வேண்டும்.   ராமசந்திரபுரா மடாதிபதி மேற்பார்வைக் குழுவின் தலைவர் நீதிபதி பி.என்.கிருஷ்ணாவின் தலை மையின் கீழ் செயல்படும் உதவி ஆணையரிடம் நிர்வாகத்தை ஒப் படைக்க  வேண்டும்" என உத்தர விட்டார்.

Comments