‘‘ஊசி மிளகாய்'' - கரோனாவை விரட்ட பாதுகாப்பமைச்சர் சொன்ன ‘‘பவித்திரமான'' யோசனை!

நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பா... அரசுகளின் ஆளுமைகளை நினைத்தால், வெட்கத்தால் எவருமே தலைகுனிய வேண்டும்.

கரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலையின் வீச்சும், அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தலைநகர் டில்லியிலும், வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் எரிப்பதற்குக்கூட இடம் கிடைக்க முடியாமல், கூட்டாக இடந்தேடி மைதானங்களையேமயானங்களாக' மாற்றிடும் வேதனை நம் இதயங்களில் இரத்தக் கண்ணீரை வரவழைக்கும் சோகத்தின் உச்சமாகும்.

இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை என்று எந்த மருத்துவமனை மருத்துவரும் கூறக் கூடாது என்று அடக்குமுறை அச்சுறுத்தலை ஏவுகணையாக்கி மிரட்டுகிறார் - காவி மாஜி அர்ச்சகரும், .பி. முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத் என்ற ஆர்.எஸ்.எஸ். முதலமைச்சர்.

அதுமட்டுமா? அங்கே இராமநவமி கொண்டாட்டம் தலைநகர் லக்னோவில் இப்போதும்.

அதில் கலந்துகொண்டு பேசுகிறார் இந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

‘‘இராமசரித மன்னாஸ்' என்ற துளசிதாஸின் ஹிந்தி இராமாயணத்தில் உள்ள இராம மந்திரத்தை உச்சரித்தால், கரோனா பறந்தோடிவிடும் என்று உபதேசம் செய்துள்ளார்'' ஓர் இராமநவமி கொண்டாட்டத்தில்.

இன்றைய நாளேடுகளில் அச்செய்தி வெளிவந்துள்ளது!

அட, அறிவுக் கொழுந்துகளா?

புதிய அறிவியலை உருவாக்கும்' நவீன சனாதனஜாம்பவான்களே!'

இராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டி பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கத் திட்டமிட்டு, வசூல் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, அயோத்தியில்ராம லல்லு' பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ‘‘இராம், இராம்'' சொல்லும் பழக்கம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இருக்கும் மாநிலத்தில், ஏனய்யா இப்படி கொத்துக் கொத்தாக நோயாளிகள் மடியும் சோகப் படலம் இருக்கவேண்டும்?

பா... தலைவர்களே பரிதாபக் குரல் கொடுக்கும் நிலை பரவலாக அங்கே ஏற்பட்டும் இராமர், தடுத்தானா என்று கேட்காதீர்கள்!

உஷ்! சட்டம் பாயும்! நம்புங்கள், இராம பஜனை பாடுங்கள்; கரோனா பறந்தோடிவிடும்' என்று நம்பித்தான் தீரவேண்டும்.

ஆக்சிஜன் பற்றாக்குறை என்று அலறாதீர்! ஆஞ்சிநேயரே வாயு புத்திரன்தான். எனவே, அவனை வேண்டி ஆக்சிஜனை - பிராண வாயுவைப் பெருக்கிட, உடனடியாக கரோனாவைத் தடுத்திட அனுமர் ஜெயந்தி எங்கும் கொண்டாடுங்கள்' என்று அரசே உத்தரவு போட்டாலும் போடக் கூடும்!

அந்தோ, ‘‘பாரத மாதாவே'' உன்னை எப்படி நாங்கள் கரோனா தொற்றிலிருந்து மீட்கப் போகிறோமோ என்று அறியாமல் புலம்புகிறோம். ஸ்ரீஇராம ஜெயம் எழுதச் சொல்லாமல், ஊசிப் போட்டுக் கொள்ளச் சொல்லுவது பச்சை நாஸ்திகம் - கடவுள் விரோதச் செயல் என்று மருத்துவ சிகிச்சைக்குத் தடை போடாமல் இருந்தால் நன்று!

, பரந்த பாரத தேசமே உன் கதி இப்படியா?

ஹரே ராம்!

Comments