தொழிற்துறை தேவைக்கான வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை, ஏப். 9- புதிய கால தொழிற்துறை தேவையை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன புதுமையான மற்றும் முன்னேற்றம் கொண்ட திட்டங்களை வழங்கும் சிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னை, அதன் முதல் கல்வி ஆண்டிற்கான 2021-2022 சேர்க்கைகளை அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் இளங்கலை தொழில்நுட்ப பட்டபடிப்பு, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (அய்ஓடி)இல் இளங்கலை தொழில்நுட்ப பட்டபடிப்பு, தொழில்முறை கணக்கியல் இளங்கலை வணிகவியல் பட்ட படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் இணைய தளத்தில் தங்களை பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள் என இப்பல்கலைக் கழக துணைவேந்தர் சிறீமன் குமார் தெரிவித்துள்ளார்.

Comments