மத்திய பா.ஜ.க. அரசின் பிடிவாதம் காரணமாக நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

மேனாள் மத்திய நிதியமைச்சர் .சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை, ஏப்.8 மோடி அரசின் பிடிவாதம் காரணமாக நோய்த் தொற்றின் எண்ணிக்கை ஒவ் வொரு நாளும் அதிகரிக்கிறது மேனாள் மத்திய நிதியமைச்சர்  என .சிதம்பரம் குற்றச்சாட்டு.

மேனாள் மத்திய நிதியமைச்சர் .சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பன்னாட்டளவில் தடுப்பூசி போடவேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் இதையே வலியுறுத்தியுள்ளனர். பன்னாட்டளவில் தடுப்பூசி போடவேண்டிய தேவை தற்போது இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. அனைத்து வயதினருக்கும் முன்பதிவு இன்றி, தடுப்பூசி போடவேண்டும் என் பதே இந்த தருணத்தில் தேவையாக இருக்கிறது.

மத்திய அரசின் விஞ்ஞான மற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாட்டின் காரணமாக, ஒவ் வொரு நாளும் நோய்த்தொற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு அனுமதித்து வருகிறது. ஒரு பெரிய பேரழிவு நாட்டுக்கு காத்திருக்கிறது. மோடி அரசாங்கத்தைப் போல, மிகக் கடுமையான எந்தவொரு ஜனநாயக அரசும் உலகில் எங்கும் இல்லை. பணமதிப்பு நீக்க நட வடிக்கை முதல் தடுப்பூசி போடும் திட்டம் வரை, பா... அரசின் தவறான கொள்கைகளுக்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image