ராமர் கோவிலையடுத்து காசி, மதுரா கோவில்: கையில் எடுக்கும் சங்பரிவார்

லக்னோஏப்.10 உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காசி, மதுரா கோவில் விவகாரங்கள் பலமாக எதிரொலிக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் மதுரா வில் கிருஷ்ண ஜென்மபூமியில் உள்ள மசூதி மற்றும் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள மசூதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டு உள் ளன. இதில் காசியில் உள்ள ஜியான்வாபி மசூதி பகுதியில் தொல்பொருள் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரங்கள் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன. இந்த சர்ச்சைகள் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் எனவும், பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறும் என்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அந்தவகையில் மணிஷ் தீட்சித் என்ற அரசியல் வல்லுனர் கூறு கையில், தொல்பொருள் ஆய்வு குறித்த நீதிமன்றம் உத்தரவு, வலதுசாரி கட்சிகளுக்கு உத்தரப் பிரதேச தேர்தலில் அரசியல் தீனியாக அமையும் என தெரிவித்தார். மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான அமர்நாத் அகர்வால் கூறும்போது, பா.ஜனதாவுக்கு ராமர் கோவில் விவகாரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. எனவே மாநில சட்டசபை தேர்தலில் மதுரா மற்றும் காசி விவகாரம் முக்கிய ஆயுதமாக இருக்கும். அதுவும் நீதிமன்ற உத்தரவு மாநில அரசியலில் புதிய பரிமாணத்தை கொடுத்திருக்கிறது என்று தெரிவித்தார்.

மாநில பா.ஜனதா துணைத்தலைவர் விஜய் பகதூர் பதக்கோ, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் உண்மை எதுவாக இருந்தாலும் அது வெளி வந்தாக வேண்டும் என்று கூறினார்.

மொத்தத்தில் மாநில சட்ட சபை தேர்தலுக்கு இந்த விவகா ரத்தை சங்பரிவார் _  மத கட்சிகள் இப்போதே கையில் எடுக்க தொடங்கியிருப்பது தெளி வாகிறது.

Comments