புதுச்சேரி கழக வீரர் த.கண்ணனுக்கு நமது வீர வணக்கம்!

 புதுச்சேரியில் திராவிடர் கழக செயல் வீரர்களில் ஒருவராகத் தொண்டாற்றிய தோழர் .கண்ணன் அவர்கள் (வயது 65) உடல் நலக் குறைவினால் நேற்று (15.4.2021) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமும், வேதனையும் அடைகிறோம்.

மயிலாடுதுறையில் கழக முக் கியப் பொறுப்பாளராகவும், நீண்டகாலம் நகராட்சி உறுப்பினராகவும், மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் தொண்டு புரிந்த தோழர் என். வடிவேலு அவர்களுடைய மருமகனார் இவர்!

புதுவையில் குடியேறிய நிலையில் திராவிடர் கழகத்தின் செயற்பாடுகளில் பங்கேற்று உழைத்த தோழராவார்.

அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; புதுச்சேரி திராவிடர் கழகத்திற்கும், தமிழ்நாடு திராவிடர் கழகத்திற்கும், நமக்கும் பெரும் இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர், பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் உரித்தாகுக.

அவருக்கு நமது வீர வணக்கம்.

குறிப்பு: அவரது இறுதி நிகழ்வில் தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர்

துரை. சந்திரசேகரன், புதுவை மாநில கழகத் தலைவர்

சிவ. வீரமணி மற்றும் அனைத்து முக்கிய பொறுப்பாளர்களும் பங்கேற்பர்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்    

சென்னை       

16-4-2021         

Comments