கர்ணன் = சுயமரியாதை எங்கள் பிறப்புரிமை!

பார்ப்பன இந்துத்துவ ஜாதி அடக்கு முறைகளால் கட்டமைக்கப்பட்ட தாங்க ளும் சனாதன இந்துத்துவத்தின் அடிமை கள் என்பதை மறந்து, தனக்கு கீழ் ஒருவன் இருக்கிறான் என்ற பார்ப்பனிய சிந்தனை யின் மனநிலையில் உள்ள ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு கருப் பொருளை மய்யமாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள கிராமமான பொடியன்குளம் கிராமத்தினைக் கடந்து போகும்  ஒரு பேருந்தைக்கூட நிறுத்த முடியாத அளவிற்கு ஒடுக்கப் பட் டிருக்கும் மக்களின் பறிக்கப்பட்ட வாழ் வியலையும், காவல்துறையின் மனித வேட் டையாடல்களையும்  பல புனைவு களுடன் திரைக்களமாக்கியிருக்கிறார் இயக்குநர் மாரிசெல்வராஜ்.

பகல் வெயிலில் சுடும் தார்ச் சாலையின் நடுவே வலிப்புடன் துடித்துக் கொண்டிருக் கும் பெண் குழந்தையை (கதாநாயகனின் தங்கை)க் காப்பாற்றக்கூட வண்டியை நிறுத்தாமல், மனித நேய மற்ற முறையில் கடந்து கொண்டிருக் கும் வாகனங்களுடன் தொடங்குகிறது படம். பொடியன்குளத்து மாணவி  கல்லூரியில் சேருவதற்காக பக்கத்து ஊரான மேலூரில் போய் பேருந்து ஏறுவதற்காக தன் தந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக் கும் போது, அவ் வழியே வந்த மேலூர்க்கார இளைஞர்கள் இவர்களை (ஜாதியை) அடையாளங் கண்டு கொள்கின்றனர். தன் கண்முன்னே தன் பெண்ணை பேருந்து நிறுத்தச் சுவரில் ஆபாசமாக வரைவதைத் தட்டிக்கேட்கும் தந்தையினை அடித்து உதைக்கின்றனர். அதைப் பார்க்கும் அந்த மாணவி இனிமேல் நான் படிக்கப் போகமாட்டேன் என்று சொல்லும் போதும், சடுகுடுப் போட்டியில் பொடியன் குளத்து அணியினர் பெற்ற புள்ளிகளை மேலூர்க்காரர்களின் தூண்டு தலால் நடுவர் குறைத்துக் கூறும் போதும் மனிதர்கள் இப்படியும் இருக்கின்றார்களா? இப்படியும் கீழ்த்தரமான மனிதர்களை உருவாக்குமா ஜாதி? என்று திடீரென்று உரைக்கின்றது.

கர்ப்பிணிப் பெண் ஒருவர் வலியால் தவித்துக் கொண்டிருக்கும் போது நிறுத்தா மல் சென்ற பேருந்தின் மீது கல்லை வீசிய சிறுவனுடன் கர்ணனும் அவனது சகாக்க ளும் சேர்ந்து அந்தப் பேருந்தை முழுவது மாக அடித்து நொறுக்குகின்றனர். உடை பட்ட பேருந்து உரிமையாளரின் புகாரை வைத்துக்கொண்டு ஏற்கெனவே அந்த ஊரின் மீதுள்ள வன்மத்தில் வரும் காவல் துறையின் உயர் அதிகாரிகள் முதல் காவலர் கள் வரை  அக்கிராமத்தையே சூறையாடி மக் களையும் அவர்களின் சான்றிதழ்களையும் விட்டு வைக்காமல் கிழித் தெறியும் போதும் ஆதிக்க நோய் எவ்வளவு மோசமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 துடிப்பு மிக்க இளைஞனாக கிராமத்து வழமையான மீன் வெட்டி வாளேந்தும் கர்ணன் தன் மக்கள் உணர்ச்சி பெற்று சக மனிதர்களாக வேண்டும் என்று ஊருக்காக பட்டாளத்து வேலையினை உதறிவிட்டு வாளேந்தி காத்து நிற்கிறான். படத்தில் ஆங் காங்கே ஒடுக்கப்பட்ட அரசியல் குறியீடுகள் ஏராளமாக காணப் படுகின்றன.

படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, வீரம் செறிந்த கிராமத்து இளைஞனாக, கதையின் நாயகனாக பிரதி பலித்திருக்கும் தேசியவிருது பெற்ற நடிகர் தனுஷ், கதாபாத்திரத் தேர்வுகளிலும், காட்சி அமைப்புகளிலும்  மெனக்கெட்டிருக் கும் இயக்குநர் மாரிசெல்வராஜ்,  பாடல் களிலும், பின்னணி  இசைகளிலும் உயிரூட் டிருக்கும், இசையமைப்பாளர் சந் தோஷ் நாராயணன்,  காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் தேனி ஈஸ்வர் அனைவரும் பாராட்டுக்குரியவர்.

 1995இல் திருநெல்வேலி மாவட்டம் கொடியன்குளத்தில் நடைபெற்ற காவல்துறையின் அராஜகத்தை தழுவி உள்ள இக்கதையை  1997 என்று வைத் திருப்பதும், அதனை பலர் சுட்டிக்காட்டிய போதும் மீண்டும் 1990களின் பிற்பகுதி என்று போட்டிருப்பதும், இந்தச் சம்பவம் நடந்த போது ஆட்சியிலிருந்தவர் பற்றிய சர்ச்சையைக் கிளப்பி தொடர் விவாதப் பொரு ளாக்குகிறது. வரலாற்று பிழையாகி விட கூடாது என்ற எச்சரிக்கை உணர் வினை ஒருபுறம் சுமந்தபடி, முற்போக்கா ளர்கள் அனைவரும் பாராட்டும் திரைப் பட மாக வந்திருக்கிறது. சமத்துவத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் இந்தக் கர்ணனை!

பார்ப்பனியம் எனும் ஜாதியத்தின் ஆணி வேரை நோக்கி ஒலிக்கட்டும் கர்ஜணை!

- வழக்கறிஞர் சோ.சுரேஷ்

Comments