இந்தியப் பயணத்தை மீண்டும் ரத்து செய்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

லண்டன், ஏப். 21- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியா வருகை தர இருந்த நிலையில், அவரது சுற்றுப் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர்  ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்பதாக அறிவித்திருந்த நிலையில் அதை ரத்து செய்திருந்தார்.  தற் போது மீண்டும் அவரது  இந் தியப் பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது.  இந்தியாவில் கரோனா 2ஆவது அலை தீவிரமடைந்துள்ளதால், போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத்திட்டம் ரத்து செய் யப்பட்டு உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி கடந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொண்டபோரிஸ் ஜான்சன் ஜனவரி 26ஆம் தேதி நடை பெற்ற இந்திய குடியரசு தின  விழாவில் சிறப்பு விருந்தின ராக கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த காலக்கட் டத்தில் பிரிட்டனில் உரு மாறிய கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால், அங்கு மீண்டும் பொதுமுடக் கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், அவரது வருகை தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டது. பின்னர் ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியா வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 3 நாள் பயண மாக வரும்  26ஆம் தேதி இந் தியா வர திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் கரோனா 2ஆவது அலை தீவிரமடைந்துள்ளதால், அவரது வருகை கேள்விக் குறியானது.  இந்திய பயண நேரத்தை குறைத்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின.,

இந்த நிலையில், தனது இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார். இதை இங்கிலாந்து  வெளி விவகார அமைச்சகம் (எம். .) ஒரு அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளது.

வெளியுறவுத்துறை அறிக் கையின்படி, இந்தியாவில் நிலவி வரும் கரோனா  நிலைமையைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் பிரதமர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரமாட்டார் என்று பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் எதிர்வரும் நாட் களில் ஒரு மெய்நிகர் கூட் டத்தை நடத்தவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே  ஏப்ரல் 18ஆம் தேதி, பிரிட்டனின் எதிர்க்கட்சி தொழிலாளர் கட்சி, பிரதமர் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், போரிஸ் ஜான்ச னின் இந்திய பயணம் மீண்டும்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

Comments