மருவாய் கிராமத்தில் இல்லத் திறப்பு விழா

மருவாய் கிளைக் கழகத் தலைவர் .திருநாவுக்கரசு கட்டியுள்ள புதிய இல்லத்தை பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் திறந்துவைத்தார். வடலூர்அருகிலுள்ள மருவாய் கழகத் தலைவர் .திருநாவுக்கரசு-கோமளா ஆகியோரின் புதிய இல்லத்தை 26.4.2021 திங்கள் காலை 8 மணிக்கு மூடநம்பிக்கை ஒழிப்புக்கான விழிப்புணர்வுடன் ராகுகாலத்தில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் திறந்துவைத்து வாழ்வியல் உரையாற்றினார். புதிய இல்லத் திறப்பு விழா வடலூர் நகர கழகத் தலைவர் புலவர் ராவணன் தலைமையில் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல் முன்னிலையில்நடந்தது. சிவசக்தி, வடலூர் தி.. தலைவர் குணசேகரன், இந்திராநகர் செயலாளர் கண்ணன், தீன.மோகன்சச்சின், திராவிடரவி ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். .திருநாவுக்கரசு வரவேற்றார். பொறியாளர் நேரு நன்றி கூறினார்.

Comments