கரோனாவை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க முயற்சி

  மோடி அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.24 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டம் 150 நாள் களை நெருங்கியிருக்கிறது.

இந்நிலையில், கரோனாவைக் காரணம் காட்டி தங்களின்போராட்டத்தை ஒடுக்க, மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.சுவராஜ் இந்தியா அமைப்பின் தலைவரும் போராடும் விவசாயி கள் தலைவர்களில் ஒருவருமான யோகேந்திர யாதவ் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் எதிர்ப்பைத் தணிக்க கரோனா வைரஸைப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. கடந்த ஆண்டும்இதே தந்தி ரத்தை அவர்கள் பயன்படுத்தினர். ஆனால் இந்தஆண்டு அதனை நாங்கள் நடக்கவிட மாட்டோம். தேர்தல் பொதுக்கூட்டங்கள் எல்லாம் வழக்கம் போல நடக்கையில், விவ சாயிகள் போராட்ட விஷயத்தில் மட்டும் கரோனா வைரஸ் தொற்றுப்பரவலை முன்னிறுத் துவதன் மூலம் மோடி அரசின் பாசாங்குத்தனம் அம்பலமாகிறது. தேர்தல் பேரணிகளை நடத்தி வரும், மத்திய அமைச்சர்களும், அதன் தலை வர்களும் மற்றவர்களை கேள்விகேட்பதற்கு எந்த உரிமையும் இல்லாதவர்கள். தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள விரும் பும் விவசாயிகளுக்காக போராட்டம் நடைபெறும் அனைத்து இடங் களிலுமே நோய்த்தடுப்பு முகாம்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. ஆக்ஸிமீட்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, கரோனாவைக் காட்டி எங்களின் போராட்டத்தைத் தடுத்துவிட முடியாது.

இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.

Comments