சென்னை,ஏப்.8- அதிமுக அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முகப்பேர் கிழக்கில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மய்யத்துக்கு தமிழக அமைச்சரும், மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளருமான பெஞ்சமின், தனது ஆதரவாளர்கள் சுமார் 25 பேருடன் 6.4.2021 அன்று சென்றார். அப்போது அங்கிருந்த சில வாக்காளர்களை பெஞ்சமின் தரப்பு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த திமுகவினர்,பெஞ்சமினை கண்டித்துள்ளனர். அப்போது பெஞ்சமின் திமுகவினரை ஆபாசமாகவும், அருவருக்கத் தக்க வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து முகப்பேர் மேற்கு பள்ளிக்கூடம் முதல் தெருவைச் சேர்ந்த நவராஜ் (36) என்பவர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் காவல்துறையினர், பெஞ்சமின் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.