செயல்வீரர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இரா.முத்தரசன் நன்றி

 சென்னை, ஏப். 8- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (7.4.2021) விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு 6.4.2021 அன்று அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மத் திய அரசின் அதிகாரத்திலி ருந்து வரும் பாஜகவும், அதன் அதிகார அரசியலுக்கு அடி பணிந்து விட்ட, அஇஅதிமுக வின் சுயநலக் கும்பலும் தமி ழகத்தின் சமுக, பொருளா தார, அரசியல் தளங்களில் முற்போக்கு வளர்ச்சியினை தடுத்து. சிதைத்து விட்டன.

நாட்டை மதவெறிப் படு குழியில் தள்ளிவிடும் பிற் போக்கு சக்திகளுடன் ஜாதி வெறி சக்திகளும் சேர்ந்து கொண்டன. இந்த தீயசக்தி களிடமிருந்து தமிழகத்தை மீட்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி உருவானது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பேராதரவு வழங்கி மாபெரும் வெற்றி பெறச் செய்தனர். தொடர்ந்து மக்க ளின் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மேலும் வலிமை பெற்று சட்டமன்றத் தேர்த லில் தொகுதி உடன்பாடு  கண்டு களத்தில் இறங்கியது.

தமிழக மக்களின் உணர்வை பிரதிபலித்த முழு நிறைவான தேர்தல் அறிக்கையினை திமுக வெளியிட் டது. இந்தத் தேர்தல் அறிக்கை தமி ழகத்தின் ஒட்டு மொத்த ஆத ரவையும் பெற்று முன்னேறி யது.

கூட்டணி கட்சிகளின் தலை வர்கள் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகம்) ராகுல் காந்தி, கே.எஸ்.அழ கிரி (காங் கிரஸ்) வைகோ (மதிமுக) தோழர்கள் சீதாராம் யெச் சூரி, பிரகாஷ்காரத், கே.பால கிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, தொல்.திருமாவள வன் (விசிக), இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ் வுரிமை கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளூர் மட்டத் தலை வர்களும், பல்லாயிரம் ஊழி யர்கள் மற்றும் செயல்வீரர் களும் மதச் சார்பற்ற முற் போக்குக் கூட்டணி வேட்பா ளர்களின் வெற்றிக்கு சோர் விலாது பணியாற்றியதற்கும், தேர்தலில் பங்கேற்று வாக்க ளித்த வாக்காளர்கள் அனை வருக்கும் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இதயபூர்வ நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 

Comments