திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் காணொலி மூலம் 24.4.2021 முற்பகல் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அணியின் தலைவர் . வீரசேகரன் முன்னிலை வகித்தார். அணியின் செயலாளர் மு. சித்தார்த்தன் வரவேற்புரை யாற்றினார்.

கழகப் பிரச்சார செயலாளர் . அருள்மொழி, கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ஜி.எஸ். பாஸ்கர், கூப்பாச்சிக் கோட்டை வீரமணி, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.அமர்சிங், நாகநாதன் (சென்னை), நம்பியூர் சென்னியப்பன், திருப்பூர் பாண்டியன், திட்டக்குடி பழனி யாண்டி, கரூர் மு.. இராசசேகரன், பா.மணியம்மை (சென்னை), கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கு.நிம்மதி, ரமேஷ் (கும்பகோணம்), வி. பிரபாகரன், கே. பாலசுப்பிரமணியன் (சென்னை, வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு. குமாரதேவன், கார்த்திக் ஈசுவரன், தாம்பரம் உத்தரக்குமார், மாநில மகளிர் பாசறை செயலாளர் சே.மெ. மதிவதனி (ஆவடி - சென்னை), தஞ்சை இரா. சரவணகுமார், விவேகானந்தன் (செஞ்சி), பொன்னையா (மதுரை), ஓவியா (சிவகங்கை), காமராசு (ஜெயங்கொண்டம்), ஸ்டாலின், ஜெ. துரைசாமி (சென்னை), தேவகுமார் (மதுரை), திராவிடர் கழகப் பொருளாளர் வீ. கும ரேசன், கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், வழக்குரை ஞர் அணியின் தலைவர் . வீரசேகரன் ஆகியோர் உரை யைத் தொடர்ந்து, கழகத் தலைவர் ஆசிரியர் நிறைவுரை யாற்றினார். (முழு உரை நாளை). வழக்குரைஞர் அணி மாநில துணைச் செயலாளர் நா. கணேசன் (மதுரை) நன்றி கூறிட பிற்பகல் ஒரு மணிக்குக் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நிறைவுற்றது. (நாளை தலையங்கம் காண்க).

Comments