செய்தியும், சிந்தனையும்....!

யாரை மன்னிப்பது போலீசையா?

*           பொன்னேரி - ஏலியம்பேடு கிராமத்தில் வயதான தாயை முட்புதரில் தள்ளிய மகன் - போலீஸ் எச்சரிக்கை!

>>           எச்சரிக்கை செய்யப்படக் கூடிய ஒன்றா இது?

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்!'

*           வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வளாகங்களில் கணினியுடன் நுழைந்த பேராசிரியர்கள்.

- மதுரைத் தகவல்

>>           நள்ளிரவில் லாரி - அந்நியர்கள் சந்தேகத்துக்கு உரிய வகையில் நுழைவு - இதுபோன்ற அய்யப்பாடுகளுக்கு இடம் அளிக்கப்படலாமா?

ஆணவமா - அலட்சியமா?

*           பெரியார், அண்ணா, காமராசர் சாலைகள் - பெயர் மாற்றம் - இவற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்!

- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்

 >>          பெரிதுபடுத்துவதில் இரண்டு வகையான பட்டியல் இருக்கிறதோ!

அபாய விளக்கு!

*           தடுப்பூசி போட்டுக் கொண்டும் கருநாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கரோனா!

>>           கவலையளிக்கும் செய்தி- மக்களிடத்தில் மேலும் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

‘‘கைதட்டுங்கள் சரியாகிவிடும்!''

*           கும்பமேளாவில் 30 சாமியார்களுக்குக் கரோனா!

>>           மதக் கிறுக்கு நோய் கரோனாவைவிடக் கொடிது!

குதிரை காணாமல் போன பின்பு இலாயத்தை  இழுத்துப் பூட்டி என்ன பயன்?

*         கரோனா: மாநில அரசுகளுடன் - மத்திய அரசு இன்று ஆலோசனை.

>>           ஆலோசித்துக் கொண்டே இருங்கள் - பொழுது விடிந்துவிடும்.

அவசரத்தின் வயது 12

*           சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பொறிக்கப்பட்டிருந்ததமிழ் வாழ்க' என்ற பலகை மறுபடியும் இடம்பெறச் செய்யவேண்டும்.

>>           அவசரப்படாதீர்கள் - கட்டட வேலை நடந்து கொண்டுள்ளது.

Comments