வி.வி.அய்.பி. விமானத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் மோடி... தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

 கொல்கத்தா, ஏப்.6 பிரதமரின் அரசு அலுவல் சார்ந்தபணிகளுக்காக வாங் கப்பட்ட வி.வி.அய்.பி. விமானத்தை, நரேந்திர மோடி தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்கு பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத் துள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் ஆகியோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு போயிங்-777 (Boeing 777 aircraft)  விமா னங்கள் ரூ. 8 ஆயிரத்து 400 கோடி செலவில் வாங்கப்பட்டன. வெளி நாட்டுப் பயணங்கள் மற்றும் அரசு அலுவல்சார்ந்த உள்நாட்டுப் பய ணங்களுக்குஇந்த விமானங்கள் பயன் படுத்தப்படும் என்று கூறப் பட்டது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, இந்த வி.வி.அய்.பி. விமானங் களை, தொடர்ச்சியாக, தான் சார்ந்த பா... தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார். அண்மையில், மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடி ஏப்ரல் 3-ஆம் தேதிஹூக்ளி மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அரசியல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இந்த பிரச்சாரக் கூட்டங்களுக்கும், ‘போயிங்-777’ வி.வி.அய்.பி விமானத் தைத்தான் பிரதமர் மோடி பயன்படுத் தினார். இது தற்போது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. மோடி, தேர்தல் பிரச்சாரத்திற்கு வி.வி.அய்.பி. விமா னத்தைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவரும், மேற்குவங்க மாநிலத் தலைவருமான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடிதனது சொந்தக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வி.வி.அய்.பி விமானத்தைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.“அரசின் அலுவல் சார்ந்த நோக்கமும் பிரதமரின் பாதுகாப்புமே விவிஅய்பி விமானப் பயன்பாட்டிற்கான முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.ஆனால் பிரதமர் ஒரு அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்போது, அது மற்றொரு அரசியல் தலைவருக்கு செலவாகவும் துன்புறுத்தலாகவும் இருக்கக் கூடாது. பிரதமர் மோடியின் பிரச் சாரப் பயணத் திட்டத்தால், நானே துன்புறுத்தலுக்கு ஆளானேன், முன்கூட்டி திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது. பிரதமரின் அரசியல் வேலைத்திட்டத்திற்காக மற்ற அனைத்து இயக்கங்களையும் தண்டிக்க வேண்டுமா? என்று கேட் கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments