அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, ஏப். 8 அரியர் தேர்வு களை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக அறிவிக் கப்பட்ட ஊரடங்கால், கல் லூரிகள் அனைத்தும் மூடப் பட்டிருந்த நிலையில், தேர் வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தமி ழக அரசு வெளியிட்ட அர சாணைப்படி, அரியர் தேர்வு கள் ரத்து செய்யப்படுவதா கவும், அரியர் தேர்வுக்கு கட் டணம் செலுத்தியவர்கள் அனை வரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல் கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச் செந்தூரைச் சேர்ந்த வழக்கு ரைஞர் ராம் குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன் றத் தில்  தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி அமர்வில் நேற்று (7.4.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக் குரைஞர், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை, அறிவியல் கல்லூரிகளில் அரி யர் தேர்வுகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானி யக்குழு தரப்பு வழக்குரைஞர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை 7 ஆம் தேதிகளில் பிறப்பிக்கப் பட்ட விதிகளின்படி, எளிய நடைமுறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங் கியதாகவும், தேர்வு நடத்த வேண்டாம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து அரியர் தேர் வுக்கு கட்டணம் செலுத்திய வர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்த ரவை ஏற்க இயலாது என்றும், அரியர் வைத்துள்ள மாண வர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதி பதிகள் தெரிவித்தனர்.

மேலும் தமிழகம் முழு வதும் உள்ள பல்கலைக்கழ கங்கள் மற்றும் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் அரி யர் தேர்வில் தேர்ச்சி அடைந் ததாக அறிவிக்கப்பட்டுள் ளார்கள் என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத் தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

கல்வியின் புனிதத்தில் எந்த வொரு சமரசமும் இல்லாமல், ஏதேனும் ஒரு தேர்வு நடை முறையை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல் கலைக்கழக மானியக்குழுவும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments