.....செய்தியும், சிந்தனையும்....!

குப்பையில் கோமேதகம்!

*           குப்பையில் கிடந்த 11 பவுன் நகை - காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள் (மோகனசுந்தரம், ராணி) - ஆணையர் பாராட்டு

>>           பணியோ - தூய்மைப்படுத்தும் பணி - உள்ளமோ தூய்மை!

மனிதனும் ஒரு வகையில்

கால்நடைதான்!

*           இன்று உலகக் கால்நடைகள் தினம்.

>>           தொடக்கத்தில் மனிதன் இரு கைகள் - இரு கால்களால்தான் நடந்தான். பிறகுதான் பரிணாம வளர்ச்சி - கால்களால் நடக்க ஆரம்பித்தான்.

கருப்பு - ஓர் எச்சரிக்கை!

*          செங்கற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் செவிலியர்களுக்கான பணியிடங்களில் 900 பேர் பற்றாக்குறை உள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி வருகிறார்கள்.

>>           இந்தக் கரோனா காலத்தில்கூட இந்த நிலையா? அரசு செயல்படட்டும்!

நூல்'களின் ஆதிக்கம் குறைய....

*           நேற்று (23.4.2021) உலகப் புத்தக நாள்.

>>           புத்தாக்க நாள் - சிந்தனைக்கு விருந்து!

மலை முழுங்கி மகாதேவன்!

*           மண்ணையும், மக்களையும் காக்க மரம் நடுவோம்!

ஈஷா சத்குரு

>>           முதலில் அவரிடமிருந்து அரசுக்குச் சொந்தமான மலையைக் காப்போம்.

மாற்று வழி?

*           இந்தியாவில் புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.

>>           இதைத் தடுக்க மாற்றுவழியைக் கண்டுபிடிப்பதுதான் முக்கியம்.

Comments