சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்குவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது- உயர்நீதிமன்றம்

மதுரை, ஏப்.8 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளைதெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத் தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி களான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் காவல் துறையினரால் விசா ரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப் பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி. அய்.டி. காவல்துறையினர், காவல் துறை ஆய்வாளர் சிறீதர் உள்பட 10 காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.அய். அதிகாரிகள் விசாரித்து வருகின்ற னர்.

இந்த வழக்கில் கைதான காவல் சிறப்பு துணை ஆய்வாளர் பால்துரை கரோனாவால் இறந்த தால், மற்ற 9 பேர் மீதான விசா ரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இந்த வழக்கில சிபிஅய் ஆவணங் களை தாக்கல் செய்யும்வரை விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என காவலர்கள் தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணைக்கு இடைக் கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

மேலும்,  இந்த வழக்கில்  சிபிஅய் பதிலளிக்கவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image