தொலைநிலை கல்வி படிப்பு: நேரடி வகுப்பு ரத்து


மதுரை, ஏப்.14 மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்தும் நேரடி வகுப்புகள், கரோனா தொற்று காரணமாக, ‘இணையம்மூலம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஏற்கெனவே குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும் என அறி விக்கப்பட்ட வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. ‘மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்என, இயக்குநர் பொறுப்பு வகிக்கும் ராமசாமி தெரிவித்துள்ளார்.

வேலை நேரத்தை குறைக்கவங்கி ஊழியர்கள் கோரிக்கை   


சென்னை, ஏப்.14 கரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, வங்கி வேலை நேரத்தை, காலை, 10:00 முதல், பிற்பகல் 2:00 மணி வரை குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாநில வங்கியாளர்கள் குழுமத்திற்கு, அந்த சங்கம் அனுப்பிய கடிதம்:தமிழகத்தில், கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றை தடுக்க, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இவற்றை வங்கிக் கிளைகளிலும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கிளைகளில் அவற்றை பின்பற்ற போதிய வசதிகள் இல்லை.

வங்கி ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதை தடுக்க, வங்கி வேலை நேரத்தை, மீண்டும் குறைக்க வேண்டும். இதன்படி, காலை, 10:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரை, வங்கி கிளைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை, 50 சதவீத சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுறுத்த வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் இருந்தால், ஆலோசனைக்கு பின் தேர்வு செய்து, அவை செயல்பட அனுமதிக்க வேண்டும்.வங்கி ஊழியர்களின் நலன் கருதி, உறுப்பினர் வங்கிகளுடன் ஆலோசனை செய்து, விரைவில் உரிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Comments