புதிய குடியிருப்பு திட்டங்கள் தொற்றுப் பரவலால் தள்ளி வைப்பு

சென்னை, ஏப். 16- கரோனா இரண்டாவது அலை பரவல் அச்சத்தால், புதிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பதை, கட்டுமான நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங் களில், பெரிய கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள் ளது. இந்நிலையில், கரோனா பரவல் மற்றும் ஊரடங்கால், 2020இல் புதிய குடியிருப்பு திட்டங்களை அறிவிக்க முடி யாத நிலை ஏற்பட்டது.

பணியாளர் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமானப் பணிகள் முடங்கின. ஊர டங்கு கட்டுப்பாடுகள் தளர்த் தப்பட்ட நிலையில், கட்டு மான நிறுவனங்கள், வெளி மாநில தொழிலாளர்களை வரவழைத்து, பணிகளை விரைவுபடுத்தின. இதனால், பாதியில் நிறுத்தப்பட்ட பல திட்டங்கள், இறுதிக் கட்டத் துக்கு வந்துள்ளன.

இதையடுத்து, புதிய குடி யிருப்பு திட்டங்களை உரு வாக்கும் பணிகளில், கட்டு மான நிறுவனங்கள் ஈடுபட் டன. ஆனால், தற்போது இதற் கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கட்டுமானத் துறையினர் கூறியதாவது: கரோனா தொற்றால், 2020 இல் ஏற்பட்ட சரிவை ஈடு கட்டும் வகையில், புதிய குடி யிருப்பு திட்டங்கள் உருவாக் கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்ததும், இத்திட்டங்களை அறிவிக்க திட்டமிட்டு இருந் தோம். ஆனால், தற்போது கரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருவதால், இதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா என்பது தெரியாத நிலையில், புதிய திட்டங்களை அறிவிப்பது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை.இதனால், புதிய திட்டங்கள் அறிவிப்பு களை வெளியிடுவதை, சில மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments