அதானி, டாடாவிடம் அதிக விலை கொடுத்து சூரிய மின்சாரம் வாங்கும் குஜராத் அரசு

 அகமதாபாத், ஏப்.8 குஜராத் அரசு அதானி டாடா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து யூனிட் டுக்கு ரூ.15 விலைக்கு வாங்கி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிக அளவில் நடைபெறுகிறது.  இங்கு வெயில் அதிகம் என்பதால் பல தனியார் நிறுவனங்கள் இங்கு சூரிய மின் நிலயங்கள் அமைத்து மின் சாரத்தை மாநில மின் வாரியத்துக்கு விற்பனை செய்து வருகிறது.   சமீபத்தில் முடிந்த குஜராத் நிதிநிலை சட்டப்பேரவை தொடரில் இது குறித்து காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்ட்து .

காங்கிரஸ் உறுப்பினர் மோகன் சின் ரத்வா வின் கேள்விக்கு மத்திய அரசு பதில் தாக்கல் செய்தது.  அந்த அறிக்கையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2020 வரை குஜராத் அரசு மொத்தம் 61 நிறுவனங் களிடம் இருந்து சூரிய மின்சக்தி வாங்கி உள்ளது.   இதில் 38 தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் ரூ.15 விலையிலும் மீதமுள்ள 23 நிறுவ னங்களிடம் ரூ.9.13லிருந்து ரூ.13.59 வரை விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

இந்த 61 தனியார் நிறுவனங்களி டம் இருந்து 5 ஆண்டுகளில் 620 கோடி யூனிட் சூரிய மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.  2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இதே நிறுவனங்களிடம் இருந்து மேலும் 57.3 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 5 ஆண்டுக் காலத்தில் அதிகபட்சமாக 32.8 கோடி யூனிட் மின்சாரம் அதானி நிறுவனத்திடம் இருந்து யூனிட் ரூ.15க்கு வாங்கப்பட் டுள்ளது.   சென்ற கால கட்டத்தை விட அதானி குழுமத்திடம் இருந்து 10.2% அளவிலான மின்சாரம் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது.   டாடா நிறுவனத்திடம் இருந்து 21 கோடி யூனிட் சூரிய மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.15 விலையில் வாங்கப் பட்டுள்ளதுஎனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அரசிடமே குறைந்த விலைக்கு நிலத்தை எடுத்து தேவையாக கருவிகளுக்கு பெரும் தொகைகளை மாணியமாக பெற்று இறக்குமதி செய்த கருவிகளுக்கு வரித்தள்ளுபடி செய்து இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த நிறுவனங்கள் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா கொடுத்தால் கூட நிருவனங்களுக்கு லாபம் தான் அப்படி இருக்க யூனிட்டிற்கு 15 ரூபாய் வாங்கி கொள்ளையடிக்கிறது அதானி நிறு வனம் அதற்கு அரசும் துணை நிற்கிறது

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image