கரோனா தடுப்பூசி: சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

கரோனா தடுப்பூசி: சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை

புதுடில்லி, ஏப்.7 கரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகா தாரப் பணியாளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள் வதில் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு கடிதம்

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், பின்னர், முன்களப் பணியாளர் களுக்கும் தடுப்பூசி செலுத்தப் பட்டது. பிறகு, 60 வயதை கடந்தவர்களுக்கும், 45 வயதை கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி விரிவு படுத்தப்பட்டது.

இதற்கிடையே, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சில கரோனா தடுப்பூசி மய்யங்களில், தகுதியற்ற சிலர் சுகாதார பணியாளர்கள் என்றும், முன்களப் பணியா ளர்கள் என்றும் பதிவு செய்து கொண்டு, தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல்கள் கிடைத்தன. இது முற்றிலும் விதிமீறல் ஆகும். இதுபற்றி கரோனா தடுப்பூசி பணிக்கான தேசிய நிபுணர் குழு கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.

இந்த குழு அளித்த சிபாரி சுப்படி, புதிதாக சுகாதார, முன்களப் பணியாளர்களின் பெயர்களை பதிவு செய்வதை உடனடியாக நிறுத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. 45 மற்றும் 45 வயதை கடந்தவர்களுக்கான பதிவுகள், கோவின் இணையதளத்தில் தொடர்ந்து மேற் கொள்ளப் படும்.

ஆனால், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட சுகாதார, முன்களப் பணியாளர்கள் பெயர் பதிவு செய்யும் பணி, அரசாங்க கரோனா தடுப்பூசி மய்யங்களில் மட்டுமே மேற் கொள்ளப்படும்.

பெயர் களை பதிவு செய்ய சுகாதார, முன்கள பணியா ளர்கள் தங்களது புகைப்படத் துடன் கூடிய அசல் அடை யாள அட்டையையும், பணியிட சான்றிதழ் நகலையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

பணியிட சான்றிதழின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது, சம்பந்தப் பட்ட நிறுவனத்தின் பொறுப் பாகும். அரசாங்க கரோனா தடுப்பூசி மய்யத்தில் உள்ள ஆவண சரிபார்ப்பு ஊழியர், மேற்கண்ட அடையாள அட் டை மற்றும் பணியிட சான் றிதழ் விவரங்களை கோவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

No comments:

Post a Comment