புதுச்சேரியில் பெரியார் சிலை மீது போர்த்தப்பட்ட துணி அகற்றப்பட்டது

புதுச்சேரி, ஏப்.8 புதுச்சேரி மூலைகுளத்தில் உள்ள தத்துவ தலைவர் தந்தை பெரியார் சிலை மீது தேர்தல் விதிமுறை என நினைத்து புதுச்சேரி தேர்தல் துறையினர் துணி போர்த்தி மூடி மறைத்திருந்தனர்.

செய்தியறிந்த புதுச்சேரி திராவிடர் கழகத்தினர் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு தரப்பட்டது. அதனுடன் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவும் தரப்பட்டது. அதன் மீது மாவட்ட ஆட்சி தலைவர் எடுத்த நடவடிக்கையால் உடனே பெரியார் சிலை மீது போர்த்தப்பட்ட துணிகள் அகற்றப்பட்டு விட்டன. மகிழ்ச்சியடைந்த மூலைக் குளம் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதுகுறித்து திராவிடர் கழக தலைமைக்கு தெரியபடுத்தியிருந்தனர். மேலும் அடிப்படை அறிவுகூட இல்லாத சிலர் செய்த தவறால், பொது மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகின்றனர் என்றனர் அங்கு வசிக்கும் மக்கள்.

Comments