சில உருமாறிய கரோனா வைரசுகளை பரிசோதனையில் கண்டறிய முடிவதில்லை: மருத்துவர் எச்சரிக்கை

புதுடில்லி, ஏப்.24 கரோனா வைரசின் சில உருமாறிய புதிய வகை களை ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோத னையில் கண்டறிய முடிவதில்லை என மருத்துவர் கூறியுள்ளார்.

நாட்டில் கரோனா பாதிப்பின் புதிய அலை தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த ஆண்டில் காணப்பட்ட முதல் அலையை விட 2ஆவது அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து காணப் படுகின்றன.  உருமாறிய கரோனா வைரசும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதுபற்றி டில்லியில் உள்ள எல் வேதியா மருத்துவ மையத்தின் மருத்துவர் சவுரதீப்த சந்திரா கூறும் பொழுது, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோத னையில் புதிய உருமாறிய கரோனா வைரசை கண்டறிய முடிவதில்லை. இரண்டு மற்றும் மூன்று வகையில் உருமாறிய கரோனா வைரசானது கண்டறியப்பட்டு உள்ளது என நான் நம்புகிறேன்.  இவற்றின் வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால், ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் அவற்றை கண்டறிய முடிவதில்லை.  இந்த புதிய வகைகள், புதிய அறிகுறிகளை தோற்று விக்க கூடியவையாக காணப்படுகின்றன.

வழக்கம்போல் காணக்கூடிய அறிகுறிகளான வறட்சி, உடல் வலி, காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவற்றுடன் கூட வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, தோலில் புண் ஏற்படுதல், குழப்ப நிலை, கை மற்றும் கால் விரல்களின் நிறங்கள் நீல நிறத்திற்கு மாறுதல், மூக்கு மற்றும் தொண்டை வழியே ரத்தம் வருதல் போன்றவையும் காணப்படுகின்றன.

முதல் அலையை விட நாட்டில் 2ஆவது அலை ஆபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது.  பரிசோதனை மய் யங்கள் உள்பட கூட்ட நெருக்கடி யான இடங்களில் மக்கள் ஒன்று கூடு வது தவிர்க்கப்பட வேண்டும்.  ஏனெனில் புதிய வகை உருமாறிய வைரசானது எளிதில் தொற்றும் தன்மை கொண்டுள்ளது. நம்முடைய சுகாதார உட் கட்டமைப்பும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கையாளும் வகையில் இல்லை.  ஆக்சிஜன், படுக்கை மற்றும் அத்தியா வசிய மருந்துகளும் பற்றாக்குறையாக காணப்படுகிறது.  உயிரிழப்பு விகிதமும் கடந்த அலையை விட அதிகரித்து காணப்படுகிறது. எனினும், நோயா ளிகள் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர்.  அதனால் உயிரிழப்பு விகிதம் கட்டுக் குள் உள்ளது என எச்சரிக்கையுடனேயே கூற வேண்டி யுள்ளது.  தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண் டும்.  ஒரு சில வாரங்களில் பாதிப்பு உச்சம் அடையும்.  அதன்பின்னர் குறையும்.  அதனால், மக்கள் கூட்ட நெருக்கடியான அனைத்து இடங்களையும் தவிர்க்க வேண்டும்.  ஏனெ னில் அது தொற்று பரவ வழிவகுக்கும்என்று கூறியுள்ளார்.

Comments