இணைய வழி வங்கிச் சேவைக்கான கருத்தரங்கம்

 சென்னை, ஏப்.3 இந்தியாவில் வணிகங்களுக்கான இணைய சேவை தீர்வு வழங்குவதில் முன்னணி நிறுவனமான டாடாடெலி பிசினஸ் சர்வீசஸ் (டிடிபிஎஸ்) ஸ்மார்ட் வங்கிக்கான ஸ்மார்ட் தீர்வுகள் பற்றி டிஜிட்டல் கருத்தரங்கம் நடத்தியது.

கூட்டுறவு வங்கி மற்றும் தொழில்நுட்பசெயலாக்க நிபுணர்  ரவிகிரன்மங்கிகார் கருத்தரங்க விவாதத்தை ஒருங்கிணைத்தார்.டாட்டாடெலி பிசினஸ் சர்வீசஸ் துணைத்தலைவர் கே.எஸ். காளிதாஸ் இக்கருத்தரங்கில் பேசுகையில், கோவிட் தொற்று காலங்களின் போது, வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வருவதை விட ஆன்லைன் வங்கி வசதிகளைப் பயன்படுத்துவதை மேற்கொண்டனர்.

வங்கித்துறை எப்போதும் எங்களுக்கு மிக முக்கியமான வாடிக்கையாளர்பிரிவுகளில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் உள்ளஅனைத்து வங்கிகளுடனும் நாங்கள் கூட்டு சேர்ந்து உலகத்தரம் வாய்ந்த ஆன்லைன் வங்கிசேவைகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வங்கிகளுக்குஉதவுகிறது என தெரிவித்தார்.

Comments