'கும்பமேளாவால்' கரோனா அதிகரிக்கும் அரசு அதிகாரிகள் எச்சரிக்கை

புதுடில்லி. ஏப். 8  உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் கும்ப மேளா திருவிழாவால் கரோனா தொற்று மிகவும் அதிகரிக்கும் என அரசு அதிகாரிகள் ஆலோ சனைக் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த வருடம் கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.   12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா இந் தியாவில் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நகரங்களில் நடைபெறுவது வழக் கமாகும்.  தற்போது அரித்துவாரில் கும்பமேளா நடந்துவருகிறது

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அரித்வாரில் பிப் ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்த விழா நடைபெறுகிறது.  தற்போது கரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்த விழாவை ஏப்ரல் 1 முதல் 30 வரை நடத்த மட்டும் உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கரோனா இல்லை என்னும் சான்றிதழ் உள்ளோர் மட்டுமே நகரில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆயினும் அரித்வார்,  ரிஷிகேஷ் போன்ற நகரங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றன.  இதையொட்டி நேற்று முன் தினம் மத்திய அரசு செயலர் மட்ட அதிகாரிகள் ஒரு ஆலோ சனைக் கூட்டம் நடத்தி உள்ளனர்.   அப்போது கும்பமேளா விழா வால் கரொனா தொற்று மிகமிக அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பமேளா விழாவைத் திட்டமிட்ட காலத்துக்கு முன் பாகவே முடிக்காவிடில் கரோனா தொற்று சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும் என அதிகாரிகள் அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.  ஆனால் அரசு தரப்பில் இந்த விழாவை விரைவில் முடிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.   எனவே மத்திய அரசு கரோனா கட்டுப்பாடு விதிகளை மேலும் கடுமையாக்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Comments