மாமல்லபுரம் சின்னங்கள்: பார்வை நேரம் குறைப்பு

 சென்னை, ஏப்.16  மாமல்லபுரத்தில், பல்லவர் கால தொல்லியல் கலைச் சின்னங்களை, சுற்றுலாப் பயணியர் கண்டுகளிக்கின்றனர்.கடந்த ஆண்டு, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கின் போது, தொல்லியல் சின்னங்கள், ஒன்பது மாதங்கள் மூடப்பட்டு, கடந்த டிச., 24ஆம் தேதி, மீண்டும் திறக்கப்பட்டன. காலை, 6 மணி முதல் மாலை, 6 மணி வரை, சுற்றுலாப் பயணியர் அனுமதிக்கப் பட்டனர். தற்போது, உருமாற்ற கரோனா மீண்டும் பரவி வருவதால், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, பார்வை நேரம் குறைக்கப்பட்டு, காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணிவரை மட்டுமே, பயணியரை அனுமதிப்பதாக, இத்துறையினர்

தெரிவித்துள்ளனர்.

Comments