மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் ஆட்டோவிலேயே பெண்ணுக்கு கரோனா சிகிச்சை: பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில் அவலம்

பெங்களூரு, ஏப். 21- நாடு முழுவதும் கரோனா 2ஆவது  அலை தீவிரமாக பரவி வருவதால், கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க  படுக்கை வசதி கிடைக்காததால், ஆட்டோவில் வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள துடன், கருநாடக மாநில பாஜக அர சின் அவலத்தையும் அம்பலப்படுத்தி உள்ளது.

கருநாடக மாநிலத்தில்  ஏப்.20 அன்று ஒரே நாளில் 19,067 பேருக்கு புதியதாக பாதிப்பு உறுதியான நிலையில், இது வரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  11,61,065 ஆக உயர்ந்துள் ளது.  நேற்று 81 பேர் உயிழந்துள்ள துடன், இதுவரை  3,351 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், மாநிலத்தில், 1லட்சத்து 33ஆயிரத்து 543 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக, அரசு மருத்துவமனை களில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி உள்ளன. இதனால், ஏராள மான நோயாளிகள் மருத்துவமனை யில் இடம் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கருநாடக மாநி லம், கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான பெண் ஒருவர் சளி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப் பட்டதால், அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கரோனா உறுதியா னது. இதையடுத்து, அவரை கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு குடும்பத்தி னர் அழைத்து வந்தனர். ஆனால் அந்த மருத்துவமனையில் படுக்கை கள் நிரம்பியதால், அவரை அனும திக்க மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் வந்த ஆட்டோவையே, பெட்டாக மாற்றி, மருத்துவமனை வளாகத்தில் அவ ருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் இணைத்து,  சிகிச்சை தற்காலிகமாக வழங்கப்பட் டது.  மேலும், ஆட்டோவிலேயே வேறு மருத்துவமனையில் இடம் கிடைக்கிறதா என பார்க்க வலியு றுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த பெண் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் சுமார் 5 மணி நேரம் ஒவ்வொரு மருத்துவமனையாக சுற்றி, சிகிச்சை பெற இடம் உள்ளதா என தேடி வந்திருக்கிறார். இந்த சம்பவம்  பொதுமக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் தான்தோன்றித்தன மான நடவடிக்கை காரணமாகவே, உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆட்டோவிலேயே சிகிச்சை பெறும் அவல நிலை உருவாகி இருப்பதாக, மாநில காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.

இந்த நிலையில், பல்வேறு மாநி லங்களில் மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாததால், ரயில் பெட்டிகளை மருத்துவ மனை களாக மாற்றும் ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில், கரோனா நோயாளிகளின் சிகிச்சைக் காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Comments