கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலம் தொடர்பாக சீரம் நிறுவன பரிந்துரை நிராகரிப்பு

புதுடில்லி, ஏப்.10 கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலம் தொடர் பாக சீரம் நிறுவன பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிரா கரித்தது.

ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவ னங்கள் இணைந்து உரு வாக்கிய கரோனாதடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.

இந்த தடுப்பூசியை சேமித்து வைக்கும் கால அளவை (அலமாரி ஆயுட் காலம்) 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக நீட்டிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப் பிடம் (டி.சி. ஜி.அய்.) பரிந் துரைத்தது.

இதை ஏற்றுக்கொண்ட டி.சி.ஜி. அய்., சீரம் நிறுவனத் தின் இந்த பரிந்துரைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க வில்லை.

இதனால் இந்த தடுப்பூசி யின் அலமாரி ஆயுட்காலத்தை உற்பத்தி நாளில் இருந்து 9 மாதங்களாக நீட்டித்தது. இதன் மூலம் தடுப்பூசி டோஸ் கள் வீணாவது குறைக்கப் பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த ஆயுட்கால நீட்டிப்புக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார நிறுவனத் துக்கு சீரம் நிறுவனம் பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்து உள்ளது.

மேலும் இது தொடர்பாக விவா திக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புடன் கூட்டம் ஒன்றுக்கும் உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியால் அய் ரோப்பிய நாடுகளில் பக்கவிளைவு குறித்த அச்சம் நிலவி வரும் நிலை யில், உலக சுகாதார அமைப்பின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Comments