தோல்வி ஜன்னியின் பிதற்றல்!

 தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்களில்  (ஆங்கில ஏடுகளிலும் தமிழில்முதல் நான்கு பக்கங்களில் .தி.மு.. சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் பெரும் செலவில் செய்யப்பட்டு இருப்பது அவர்களின் கடைசி கட்ட ஆயுதம் - அச்சத்தின் வெளிப்பாடு. அதேபோல, 'நீட்' பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்ட அனிதா .தி.மு.கவுக்கு வாக்குக் கேட்பதைப் போல காணொலி ஒன்றும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலையில், நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தான் இத்தகு விளம்பரங்கள்!

அந்தந்தத் தருணத்தில் நாளிதழ்கள், மின் ஊடகங்களில் வெளியானதாகக் கூறப்படும்  செய்திகள் சேகரிக்கப்பட்டு, நாளிதழில் செய்திகள் போல வடிவமைக்கப்பட்டு விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் பாரம்பரிய செய்தித்தாள்கள் அனைத்திலும் இந்த நான்கு பக்க விளம்பரங்கள், விளம்பரம் என்று தெரியாத அளவுக்கு உண்மை செய்தியைப் போல  வெளியிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் கீழேயும் "இப்பக்கங்களில் இடம் பெற்றுள்ள செய்திகள் யாவும் பல்வேறு செய்தித் தாள்களிலும், இணைய செய்தித் தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்டவை. எதுவும் கற்பனை அல்ல" என்று - 'எங்களப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்லும் பாணியில் வெளியிடப்பட்டு இருந்தது.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் வெளியான இந்த விளம்பரங்கள் பற்றி தி.மு.. தலைவர் மு.. ஸ்டாலின் கருத்துகள் கூறியுள்ளார். 

"இன்றைக்குக் காலையில் எல்லா நாளிதழ்களிலும் பக்கம் பக்கமாக விளம்பரங்கள். அதாவது, தி.மு.. என்னென்ன அக்கிரமங்களை செய்திருக்கிறது, கடைகளில் புகுந்து அடித்து உடைத்திருக்கிறது என்றெல்லாம் தலைப்புச் செய்திகளைப் போட்டு தி.மு.. பெறும் வெற்றியைத் தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பத்து வருடமாக யார் ஆட்சியில் இருப்பது? தி.மு.கவா ஆட்சியில் இருக்கிறது? .தி.மு.கதான் ஆட்சியில் இருக்கிறது. நம் மீது தவறு இருந்திருந்தால், அது தொடர்பாக வழக்குப் போட்டிருக்கிறார்களா? ஒரு வழக்கு உண்டா? அது நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?"

"நம் மீது தவறு இருந்திருந்தால், அது உண்மையாக இருந்திருந்தால் வழக்குப் போட்டிருக்க வேண்டும்; கைது செய்திருக்க வேண்டும். அதற்குரிய தண்டனையைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படியேதும் நடக்கவில்லை. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது அதைப்பற்றி சிந்திக்காதவர்கள், நினைக்காதவர்கள் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக இப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்து மக்களைத் திசை திருப்ப நினைக்கிறார்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்தால், ஏதோ விளம்பரம்போல அமைக்கப்படவில்லை. இன்றைக்கு - நேற்று நடந்த செய்தியைப் போல வெளியிட்டிருக்கிறார்கள். யாராவது விவரம் தெரியாதவர்கள் படித்துப்பார்த்தால் செய்தியாகத்தான் படிப்பார்கள். விளம்பரமாக பார்க்க மாட்டார்கள்" என விமர்சனம் செய்திருக்கிறார்.

அதேபோல, நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட அனிதா, .தி.மு.கவிற்கு வாக்கு கேட்பதைப் போன்ற ஒரு காணொலியை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தனது சுட்டுரை (டூவிட்டர்) பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

'நீட்' தேர்வால் தனக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் போய்விட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனிதா வந்தபோது எடுக்கப்பட்ட காணொலிகள் ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு ஒலிமாற்றம் செய்யப்பட்டிருந்தன. அதில், "வருடத்திற்கு 400 பேருக்கு மேல் அரசுப் பள்ளியிலிருந்து மருத்துவம் படிப்பதென்பது தமிழக சரித்திரத்திலேயே கிடையாது. இந்த வாய்ப்பை ஜெயலலிதா அம்மாவின் ஆட்சி தந்திருக்கிறது.

இதுபோல 'பாசிட்டிவான' விஷயங்களைச் செய்யாமல் எங்களை சாகடிச்சு உங்களோட அரசியல் வாழ்க்கைக்கு ஏன் தீனியாக்குறீங்க? எங்கள் கனவுகளை நாசமாக்கிய தி.மு.கவை மன்னிக்காதீங்க" என்று அனிதா கூறுவதைப்போல அந்த காணொலி ஒலிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மறைந்த அனிதாவின் சகோதரர் தோழர் மணிரத்னம், அமைச்சரின் செயலைக் கண்டித்து காணொலி ஒன்றை வெளியிட்டார். "உங்களுக்கு ஒரு பெண் இருந்திருந்து, அவர் இறந்திருந்தால் இப்படிச் செய்வீர்களா? இது எங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. தயவுசெய்து அந்த காணொலியை எடுத்துவிடுங்கள்" என்று அதில் அவர் கூறியிருந்தார்.

செந்துறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்போவதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில், தனது சுட்டுரைப் பக்கத்திலிருந்து அந்தப் பதிவை நீக்கியிருக்கிறார் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்

 தமக்குத் தெரியாமல் யாரோ இதனைச் செய்துள்ளனர் என்று கூற வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டனர்.

இதற்கு முன் ஒருவர் என் 'அட்மின்' செய்து விட்டார் என்று சொல்லவில்லையா?

ஒன்று மட்டும் தெரிகிறது. தோல்வி ஜன்னியில் ஆளும் தரப்பினர் பிதற்றுகிறார்கள் என்றே கருத வேண்டும்.

பித்தம் தெளிவுற மாமருந்து - இவர்களுக்குத் தோல்வி என்னும் அதிர்ச்சி வைத்தியம் தான்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image