மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை நாடு கடத்த அமெரிக்க அரசு ஆதரவு

லால்ஏஞ்சல்ஸ், ஏப். 15- கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 166 பேர் பலியானார்கள்.

இதுதொடர்பாக தேடப் பட்ட லஷ்கர் தொய்பா பயங்கரவாதி டேவிட் கோல் மன் ஹெட்லி, அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானிய தொழி லதிபருமான தஹாவுர் ராணா ஆகியோர் சில ஆண் டுகளுக்கு முன்பு அமெரிக்கா வில் கைது செய்யப்பட்டனர்.ராணாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள் ளதால், அவரை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கு மாறு அமெரிக்க அரசை இந் திய அரசு கேட்டுக்கொண்டது.

இதுதொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அமெ ரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் இந்தியா தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ராணாவை நாடு கடத்த அமெரிக்க அரசு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்தநிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் அரசு சார்பாக நீதி மன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், குற்றவாளிகளை நாடு கடத்த இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்கெனவே ஒப் பந்தம் உள்ளது. ராணாவை நாடு கடத்தும் கோரிக்கை, இந்த ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறது.

ஆகவே, அவரை நாடு கடத்தும் கோரிக்கையை அமெரிக்க அரசு எப்போதும் ஆதரிக்கிறது என்று கூறப் பட்டுள்ளது. இம்மனு, ஜூன் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று நீதிபதி ஜாக்கு லின் சூல்ஜியன் தெரிவித்தார்.

Comments