தந்தை பெரியார் மீதான அவமதிப்பு தொடர்கின்றன!

 செந்துறை பெரியார்  நினைவு சமத்துவபுரத்தில் சாமி சிலைகள்!

 அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் இரவோடு இரவாக பெரியார் சிலைக்கு எதிரில் சாமி உருவங்களை வைத் துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் எந்த மத வழி பாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று அரசு ஆணைகளே உள்ளன. (ஆதி திராவிடர் நலத்துறை (நீ..4) நாள் 22.10.1997 மற்றும் அரசு ஆணை (நிலை) எண் 78 நாள் 27.3.2000) சிற்சில இடங்களில் இது போன்ற விஷமத் தனங்கள் நடை பெற்றபோது கழகத் தலைவர் அவர்களால் அரசின் கவனத் துக்குக் கொண்டு வரும் வகையில் அறிக்கை களும் வெளியிடப்பட்டுள்ளன. (விடுதலை 27.1.2018 மற்றும் 8.12.2019).

குமரி மாவட்ட செண்பகராமன் புதூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டபோது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு கழகத் தலைவர் புகார் கடிதம் எழுதினார் (23.1.2018). இரு நினைவூட்டுக் கடிதங்களும் எழுதப்பட்டன. (24.2.2018) மற்றும் 1.2.2019)

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுக்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

அரசின் அலட்சியப் போக்கால் மேலும் பல பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் சட்ட விரோதமாக கடவுள் சிலைகள் வைக்கப்படு கின்றன. இது ஒரு திட்டமிட்ட சதிப் பின்னல்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பச்சைத் தமிழர் காமராசர் பெயர்களில் உள்ள சாலைகளில் பெயர்களை மாற்றும் அளவுக்கு பா... - பார்ப்பனீயத்தின் தொங்குசதையாகி விட்டது - அதிமுக அரசு;  வெட்கக் கேடு!  காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? போராட்டம் அவசியமாகுமா என்பதைப் பார்ப்போம்!

Comments