ஒடிசா சட்டப்பேரவைத் தலைவர் மீது செருப்பு வீச்சு! பா.ஜ.க. உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம்!

 புவனேஸ்வர், ஏப்.6-    ஒடிசா சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பின்பு, சுரங்க ஊழல்பற்றி காங்கிரஸ் கட்சிகொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் மற்றும் உறுப்பினர்களின் விவாதம் ஆகியவற்றுக்கு பேரவைத் தலைவர்சூர்ய நாரா யண்பேட்ரோ அனுமதி மறுத்து விட்டார்.

 அதே நேரம் ஒடிசா லோக்ஆயுக்தா திருத்தமசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு அவையில் எதிர்ப்புக் கிளம்பியது. பா... சட்டமன்ற உறுப்பினர்களின் கூச்சலால் அமளி ஏற் பட்டது.

ஒருகட்டத்தில், பேரவைத் தலைவரின் நட வடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேஜை மீது ஏறிய பா...வினர் ஜெயநாராயண்மிஸ்ரா, விஷ்ணு பிரசாத்சேத்தி மற்றும் மோகன்மஜ்ஜி ஆகியோர் பேரவைத் தலைவர் நோக்கி செருப்பு, குப்பைக் கூடை, ஒலி வாங்கிகள் மற்றும் காகி தங்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்து, ரகளையில் ஈடுபட்டனர். இது சட்டப் பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனடிப்படையில், பா... உறுப் பினர்கள் 3 பேரையும், கூட்டத் தொடர்முழுவதும் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் சூர்யநாராயண் பேட்ரோ உத்தரவிட்டுள்ளார்.

Comments
Popular posts
நெடுஞ்சாலை இணைய தளத்தில் சென்னை - அண்ணாசாலை - காமராஜர் சாலை பெயர்களும் மாற்றப்பட்ட கொடுமை! நமது வன்மையான கண்டனம்!
Image
சாரைசாரையாக புறப்படும் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்கள் முடங்கும் அபாயம்
Image
‘இந்து மதம்' என்ற ஆரிய - சனாதன மதத்தின் ஆணிவேரான வருணதர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்து எறிவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்மாலை சூட்டிப் பெருமை சேர்ப்பதாகும்!
Image
மகாராட்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா? - சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்
Image
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை மாற்றுவதா? அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
Image