பொறியியல் படிப்பில் அரியர் தேர்வு எழுத மாணவர்களுக்கு சலுகை

சென்னை, ஏப்.18 பொறியியல் பயிலும் மாணவர்களில்அரியர்உள்ளவர்கள் இன்னும் மூன்று பருவத் தேர்வுகளை கூடுத லாக எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.

அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லூரிகளுக்கு பதிவாளர் கருணாமூர்த்தி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் குறித்த காலத்தில் நிலுவை தேர்வுகளை முடிக்காதவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 2020 ஜூலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில்

 ‘1990 முதல் படிப்பில் சேர்ந்தவர் களுக்கு இன்னும் மூன்று முறை நிலுவைத் தேர்வை எழுத அவகாசம் வழங்கலாம்என முடி வானது.

இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட அண்ணா பல்கலை சிண்டி கேட் கூட்டத்தில் அவகாசம் முடிந்த மாண வர்களுக்கு இந்த ஆண்டு ஆக. - செப். தேர்வு அடுத்த ஆண்டு பிப். - ஆக. தேர்வு ஆகியவற்றில் பங்கேற்க சிறப்பு அனுமதி தர முடிவானது.

அதன்படி அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் 1990 முதல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்ந்த வர்களும்; அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லூரி களில் 2001ஆம் ஆண்டின் மூன்றாவது பருவ மற்றும் 2002 முதல் செமஸ்டர் முதலும் சேர்ந்த மாணவர்கள் கூடுதல் அவகாச சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Comments