அலைக்கற்றையில் மின்சாரம்

 5ஜி அலைக்கற்றை, மற்ற அலைவரிசைகளைவிட மிக அதிகமான மின்காந்த ஆற்றலைக்கொண்டது. சீட்டுக் கட்டு அளவே உள்ள ஒரு அட்டை மீது, இங்க் ஜெட் அச்சியந்திரம் மூலம், 'ஆண்டெனா சர்க்யூட்'டை அச்சிட்டால் போதும். இந்த அச்சுக் காகிதகத் கருவியால், காற்றில் மிதக்கும் மின்காந்த அலைகளிலிருந்து, 6 மைக்ரோ வாட்கள் அளவுக்கு மின்னாற்றலை தயாரிக்க முடியும். இந்த சீட்டுக் கட்டு ஆண்டனாவை, குறிப்பிட்ட திசையில்தான் பிடித் திருக்கவேண்டும் என்ற அவசியமும் கிடையாது. அச்சிடப்பட்ட சர்க்கியூட்டுக்கு நடுவே உள்ள, 'ராட்மேன்' லென்ஸ் என்ற கருவி, அலைக்கற்றை சமிக்ஞைகளை குவிக்கும் வேலையைச் செய்கிறது. இதனால், 590 அடி தொலைவிலுள்ள கருவி அனுப்பும், 5ஜி அலைவரிசையிலிருந்து கூட மின்சக்தியை உற்பத்தி செய்துவிடுகிறது.

இக் கருவி உற்பத்தி செய்யும் மின்னாற்றல், மிகச் சிறிய உணரிகள், போன்றவற்றை இயக்கப் போது மானவை என ஜார்ஜியா பல்கலை ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments