வேல் முருகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 2, 2021

வேல் முருகன்

தாராபுரம் - தேர்தல் பிரச் சாரத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக பா... தலைவர் எல்.முருகன் வேல் ஒன்றைக் கொடுத்தார். பிரதமரும் அவருக்குத் தெரிந்த தமிழிலும், உச்சரிப் பிலும், ‘வேல், வேல்' வெற்றி வேல்!' என்று முழக்கம் போட் டார்.

2 கோடி பேருக்கு வேலை தருவதாகப் பிரதமர் சொன் னாரே, அது என்னாச்சு என்று கேட்ட இளைஞர்களின் கையில்வேலை'க் கொடுத் தார். எல்.முருகன் அதை எடுத்துக்கொண்டு வீதி வீதி யாகத் திரிந்தார்.

தமிழ்நாட்டில் போனியாக வில்லை. இப்பொழுது பிரத மரின் கையில் கொடுத்து ஒருஜிம்கானா' செய்தார் - இவ ரைப்பற்றி மேலும் சில தக வல்கள் உண்டு.

தமிழகம் முழுவதும் பாஜக வின் சார்பில் வெற்றிவேல் யாத்திரை மேற்கொள்ளப்பட் டது. கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்துள்ள போதும், பாஜகவினர் இந்த யாத்திரையை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தனர். பக்தி நிகழ்வாக அல்லாமல் சட்ட மன்றத் தேர்தலை நோக்க மாகக் கொண்டு நடைபெறு வதாக விமர்சனங்கள் எழுந் தன.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நவம்பர் 23 ஆம் தேதி (2020) சென்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மத்திய இணைய மைச்சர் முரளிதரன், அண்ணா மலை உள்ளிட்டோர் வழிபாடு நடத்தினர்.

எல்.முருகன் கையில் வைத்திருந்த யாத்திரை வேலை மூலவர் சிலை அருகே வைத்து பூஜை செய்து தரும்படி பாஜக நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு அர்ச்சகர்கள் மறுத்து விட்டனர். (முருகன் மனதில் அப்பொழுது தந்தை பெரியார் நினைவு வந்திருக்கும் என்று நம்புவோம்)

பின்னர் ஆவினங்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கரோனா காரண மாக பழனியில் வின்ச் மற்றும் ரோப் கார் ஆகியவை இயக் கப்படாத நிலையில், மலைக் கோயிலுக்குச் செல்ல பாஜக வினருக்கு மட்டும் இயக்கப் பட்டது - அப்பொழுது அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பழனி கோவில் மற்றும் அங்குள்ள உபகோவில்களில் கைப்பேசி மற்றும் கேமராக் களைப் பயன்படுத்திப் படம் பிடிக்கத் தடை உள்ளது. ஆனால், ஆவினங்குடி கோவிலில் எல்.முருகன், மூல வரை தரிசனம் செய்வது போன்ற ஒளிப்படம் பாஜக வின் முகநூல் பக்கத்தில் பதி வேற்றப்பட்டது. தடை செய் யப்பட்ட இடத்தில் ஆகம விதிகளை மீறி மூலவர் தெரி யும்படி படம் எடுத்தது தொடர் பாக எல்.முருகன் உள்ளிட் டோருக்கு எதிராக கோவில் நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. (29.12.2020).

அதன் நிலை என்ன வென்று தெரியவில்லை. பழனி முருகன் சிலையே சுரண்டப்பட்டதுபற்றி எல்லாம் தகவல் வந்ததுண்டு.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பாருங்கள், விவரம் புரியும்!

 - மயிலாடன்

No comments:

Post a Comment