தடுப்பூசி போட்ட பின் பாதிக்கப்படுவோர் மிகக்குறைவு: மத்திய அரசு தகவல்

 புதுடில்லி, ஏப்.24 கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண் ணிக்கை மிக மிகக் குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைர சின் 2ஆவது அலை வேக மாக பரவி வருகிறது. இதை யடுத்து, அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக் கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

தற்போது வரை கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளே மக்கள் பயன் பாட்டில் உள்ளன. இன்னும் பல கரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நாட்டில் 13 கோடிக் கும் மேற்பட்டோருக்கு இந்த தடுப் பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் மீதான சந்தேகங்களும், அச்சங்களும் இன்னும் விலகவில்லை.

மேலும், தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக் கும் தொற்று ஏற்படுவதாக செய்திகள் பரவுவதால் மக்கள் இடையே தயக்கமும் நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த விவ காரம் குறித்து மத்திய அரசின் சுகாதாரத் துறை நிபுணர்கள் நேற்று (22.4.2021) கூறியதாவது:

கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு மிக அரிதாகவே வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

உதாரணமாக, 10 ஆயிரம் பேர் தடுப் பூசிகளை செலுத்திக் கொண் டால் அவர்களில் 2 அல்லது 4 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை இதுவரை 1.10 கோடி பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

இவர்களில் முதல் தவணையை செலுத்திக் கொண்ட 90.3 லட்சம் பேரில் 4,208 பேருக்கு (0.04%) மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கெண்ட 17 லட்சம் பேரில் 695 பேருக்கு மட்டுமே பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக் கிறது. இதுவும் 0.04 சதவீதம் தான்.

இதேபோல, கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண் டவர்களிலிலும் மிக மிகக் குறை வான நபர்களுக்கே கரோனா தொற்று ஏற்பட்டுள் ளது. அதுவும், இந்த நபர்களில் பெரும்பாலோ னார் சுகாதார ஊழியர்கள் போன்ற  முன்களப் பணியாளர்கள் ஆவர்.

எனவே, கரோனா தடுப்பூசி களை செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்ட வேண் டாம். இப்போதைய சூழலில், இந்த பெருந்தெற்றைக் கட்டுப் படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதை மக்கள் உணர

வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments