பதவிக் காலம் முடிந்தாலும் துணைவேந்தர் சூரப்பாவின்மீதான விசாரணை தொடரும் : விசாரணை ஆணையம் தகவல்

சென்னை,ஏப்.12- அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கருநாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய் யப்பட்டார். இந்த துணைவேந்தர் பதவிக்கு அப்போது விண்ணப் பித்த 170 பேரில், சூரப்பாவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தேர்வு செய்திருந்தார்.

இதற்கு அப்போதே பல அரசியல் கட்சிகள், கல்வியா ளர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு களுக்கு மத்தியில் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பை ஏற் றுக்கொண்டு பணியாற்றினார். பல்கலைக்கழக ரீதியாக தொடர்ந்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகத் துக்கு உயர்கல்வி சிறப்பு நிறு வனம் என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில், மாநில அரசுக்கும், இவருக்கும் இடையே பல்வேறு மோதல்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அரியர் மாணவர் களுக்கு தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு கடிதம் எழுதியது என பல்வேறு விஷயங்களில் சூரப்பா பெரிதும் பேசப்பட்டார்.

அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.  இதற்கிடையில் அவர் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து, அதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் 3 ஆண்டு பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

அவருடைய பதவிக் காலம் முடிந்து இருந்தாலும், அவர் மீதான ஊழல் புகார் குறித்த விசாரணை தொடரும் என்று விசாரணையை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் விசா ரணையை முடித்து, அடுத்தகட்ட அறிக்கையை அரசுக்கும் அவர் சமர்ப்பிக்க இருக்கிறார்.

சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர் ஏற் கெனவே ஆளுநரிடம் துணை வேந்தர் பதவிக்காலத்தை நீட் டிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் அந்த கடிதத்துக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது ஒரு புறம் இருக்க, புதிய துணை வேந்தரை நியமனம் செய்வ தற்கான தேடுதல் குழுவை பல் கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரி லால் புரோகித் சமீபத்தில் நிய மித்தார். இந்த தேடுதல் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. அதன்பின்னர், அந்த குழுவினர் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான பணிகளை தொடங்க உள்ளனர். அதன்படி, இந்த குழு 3 பேரின் பெயரை ஆளுநரிடம் பரிந்துரைக்க இருக்கிறது.

Comments