மாநிலங்களவை தேர்தல் தேதி வாபஸ்: காரணம் கேட்கும் கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்,ஏப்.8 கேரள மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதியைத் திரும்பப் பெற்றதற்கு தேர்தல் ஆணையத்திடம் கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் கேரளாவில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.  இதையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  ஆனால் அந்த அறிவிப்பை ஆணையம் திரும்பப் பெற்றது.

இது குறித்து மத்திய சட்டத்துறை பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் தேதி திரும்பப் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில செயலர் எஸ். சர்மா கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.   இந்த மனுவைக் கேரள உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

இந்த விசாரணையில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட தேர்தல் தேதியை திரும்பப் பெற்றது ஏன் என எழுத்து பூர்வ விளக்கம் அளிக்குமாறு கேரள நீதிமன்றம்  தேர்தல் ஆணையத்திடம்  கேட்டுள்ளது.  இந்த வழக்கு இன்று (8.4.2021) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.   இந்நிலையில் உறுப்பினர்கள் ஓய்வுக்கு முன்னர் தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

பல்கலை.யில் விடைத்தாள் திருத்தும் முகாம் ரத்து     

மதுரை, ஏப்.8 மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 77 கல்லூரிகளில் கடந்த மாதம் நடத்திய இணைய வழித் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த கல்லுரிகளிலேயே திருத்த உத்தரவிடப் பட்டுள்ளது. வழக்கமாக பல்கலையில் நடக்கும் விடைத்தாள் திருத்தும் முகாம் இந்தாண்டு கரோனா இரண்டாம் அலை தொற்று அச்சத்தால் ரத்து செய்யப் பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு பல்கலை தேர் வாணையர் தர்மராஜ் அனுப்பிய உத்தர வில், வாகனங்களில் விடைத்தாள்களை சேகரிக்கும் பணி ரத்து செய்யப்படுகிறது. பல்கலையில் நடக்கும் முகாமிற்கு பதில் அந்தந்த கல்லூரிகளிலேயே பாடம் வாரியாக விடைத்தாள்களை திருத்தி அதற்கான மதிப்பெண்ணை பல்கலைக்கு அனுப்பி வைக்க வேண்டும்‘ என தெரிவித்துள்ளார்

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image