வாகனங்களில் பிரதிபலிப்பு நாடாக்கள் அரசு நிபந்தனையால் சிக்கல்

சென்னை, ஏப்.16 வாகனங் களில், ‘ரிப்ளெக்டிவ் டேப்எனும், பிரதிபலிப்பு நாடாக் கள் ஒட்டுவதில், புதிய கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டுள்ள தால், தகுதிச் சான்று பெறு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ‘அராய்மற்றும், ‘அய்கேட்எனும் தரக் கட்டுப்பாட்டு நிறுவனங் களின் அங்கீகாரம் பெற்ற பிரதிபலிப்பு நாடாக்களை மட்டுமே, வாகனங்களில் ஒட்ட வேண்டும் என, தமிழக போக்குவரத்து துறை உத்தர விட்டுள்ளது.  இந்த நாடாக் களை ஒட்டாத வாகனங் களுக்கு, எப்.சி., எனும் தகுதிச் சான்று அங்கீகரிக்கக் கூடாது எனவும்உத்தரவிட்டுள்ளனர்.

இதனால், லாரிகள், பேருந் துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டுமின்றி, கார்கள், ஆட்டோக்கள் உள் ளிட்ட, இலகு ரக வாகனங் களுக்கான தகுதிச் சான்று பெறுவதிலும் சிக்கல் ஏற்பட் டுள்ளது.இது குறித்து, தமிழ் நாடு மாநில லாரி உரிமை யாளர்கள் சங்கச் செயலர் தன்ராஜ் கூறியதாவது:

தமிழக அரசு ஏற்கெனவே, வாகனங்களின் பக்கவாட் டிலும், முன், பின் பக்கங்களிலும் பிரதி பலிப்பு நாடாக்கள் ஒட்டு வது குறித்த உத்தரவை பிறப்பித்தது.

அதாவது, மத்திய அரசு அங்கீகரித்ததாகக் கூறப்படும், இரண்டு நிறுவனங்களின் நாடாக்களை மட்டுமே ஒட்ட வேண்டும் என்பதே, அது. ஏற்கெனவே, பல்வேறு நிறுவ னங்கள் வழங்கும் நாடாக் களின் விலையுடன் ஒப்பிடும் போது, போக்குவரத்து துறை அதிகாரிகள் குறிப்பிடும் நிறுவன நாடாக்களின் விலை, நான்கு மடங்கு அதிகம் உள்ளது.

அதாவது, ஒரு லாரிக்கு மட்டுமே, 6,000 ரூபாய் முதல், 10 ஆயிரம்ரூபாய் வரை கூடுதலாக செலவாகிறது.

ஏற்கெனவே, டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, தனி நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்வு, சரக்கு கிடைக்காமை உள்ளிட்டவற் றால், லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் இந்த உத்தரவு, மோட்டார் வாகன தொழிலை நசுக்குவதாக உள்ளது.

இந்த பிரதிபலிப்பு நாடாக் களுக் கான அங்கீகாரம் வழங் குவதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன.

Comments