ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் வியன்னா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணைந்தது

டெக்ரான், ஏப். 9- ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் இணைந்து உள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்கா உள் ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்க ளது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

ஒபாமா ஆட்சிக்காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்துக்கு, அப்போது துணை அதிபராக இருந்த ஜோ பைடன் முழு ஆதரவு தெரிவித்திருந்தார்.

எனினும், ஒபாமாவுக்கு அடுத்த படியாக ஆட்சிக்கு வந்த டிரம்ப், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலி ருந்து விலகுவதாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிரடியாக அறிவித்தார். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தார்.

அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் அமெரிக்காவில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற் பட்டு புதிய அதிபராக பொறுப்பேற் றுள்ள ஜோ பைடன், ஈரானின் அணு சக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணை வதற்கான தனது விருப்பத்தை வெளிப் படுத்தியுள்ளார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முழுமையாக இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணை வது குறித்து ஈரானுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா கூறுகிறது.

ஆனால் அமெரிக்கா தங்கள் நாட் டின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முழுமையாக திரும்பப் பெற்றால் மட்டுமே அணுசக்தி ஒப் பந்தத்தின் நிபந்தனைகளை பின்பற்று வோம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து உரசல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அணுசக்தி ஒப் பந்தத்தை பாதுகாக்கும் முயற்சியாக, அதில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத பிற நாடுகளான இங்கி லாந்து, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்சு மற்றும் ஈரான் ஆகிய நாடு கள் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில்மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை நீக்குவ தற்கும், அணுசக்தி ஒப்பந்தத்தில் ஒப் புக்கொள்ளப்பட்ட வரம்புகளுக்கு ஈரான் திரும்புவதற்கும் ஒரு வழியை கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் அய்ரோப்பியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடை பெறும் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் தற்போது இணைந்து உள்ளது.

Comments